இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு மழையால் தடை? சோகத்தில் ரசிகர்கள்!
நியூயார்க் நேரப்படி காலை 10:30 போட்டி ஆரம்பமாகும் நேரத்தில் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நியூயார்க் நகரில் நடைபெற உள்ள நிலையில், மோசமான வானிலையால் போட்டி முழுமையாக நடைபெறுமா என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நியூயார்க் நேரப்படி காலை 10:30 போட்டி ஆரம்பமாகும் நேரத்தில் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டி நேரமான காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை 50 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.
எனினும், தற்போது வெளியாகி உள்ள அறிக்கையின்படி 10 மணி முதல் 12 மணி வரை 45 சதவீத மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், 12 மணி முதல் 2 மணி வரை 20 முதல் 35 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மதியம் 2 மணிக்கு மேல் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், போட்டி நேரத்திற்கு முன் அல்லது போட்டி நேரத்தில் மழை பெய்யும் என கூறப்படுகிறது.
அதனால், திட்டமிட்டபடி 40 ஓவர்களும் முழுமையாக வீசப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், சில ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்த வாய்ப்பு காணப்படுகின்றது.
எனவே, இந்த போட்டியை முழுமையாக பார்க்கலாம் என காத்திருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
மழை பெய்தால் பிட்ச்சில் மாறுதல்கள் ஏற்படும் என்பதுடன், அது முதலில் பேட்டிங் செய்யும் அணியை அதிகம் பாதிக்கும்.
இந்திய அணியானது வலுவான நிலையில் உள்ளதுடன், பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரை உலகக் கோப்பை தொடருக்கு முன் அயர்லாந்து அணி உலகக் கோப்பையில் அமெரிக்க அணி என சிறிய அணிகளிடம் தோல்வி அடைந்து துவண்டு போய் உள்ளது.
இந்த நிலையில் மழையால் ஏற்படும் மாற்றம் அந்த அணிக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளதாகவும் பார்க்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |