விராட் கோலி 15 ஆண்டுகளுக்குப் பின் விஜய் ஹசாரே கோப்பையில் கம்பேக் – தேர்வுக் குழுவின் கோரிக்கையை ஏற்ற கிங்!
இந்திய தேசிய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், 2027 உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவின் தகுதித் தேவைகளை கடுமையாக எதிர்த்து வந்தனர்.
விராட் கோலி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் தொடரில் விளையாட உள்ளார். இது, 2027 உலகக் கோப்பைக்கான தேர்வுக் குழுவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஒரு முக்கியமான முடிவாகும்.
இந்திய தேசிய அணியில் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும், 2027 உலகக் கோப்பைக்கு தேர்வு குழுவின் தகுதித் தேவைகளை கடுமையாக எதிர்த்து வந்தனர்.
அவர்கள், “நாங்கள் எங்கள் திறமையை பல முறை நிரூபித்துவிட்டோம். உள்ளூர் போட்டிகளில் விளையாடினால் இளம் வீரர்களுக்கான வாய்ப்புகள் பாதிக்கப்படும்” என வாதிட்டனர்.
இந்நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர், அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது கட்டாயம் என்று முடிவெடுத்தனர்.
தேர்வுக் குழு உறுப்பினர் பிரக்யான் ஒஜா, கோலி, கம்பீர் ஆகியோருடன் ராய்ப்பூரில் நடந்த உரையாடலில், “உலகக் கோப்பைக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளன. உடல் தகுதி பேணுவது மட்டும் போதாது, உண்மையான போட்டி அனுபவம் (match practice) தேவை” என்று வலியுறுத்தினார்.
மேலும், “பெரும்பாலான வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட்டில் கலந்துகொள்கின்றனர். இரு நிதான வீரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிப்பது நியாயமில்லை” என்றும் ஒஜா தெளிவுபடுத்தினார்.
இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, விஜய் ஹசாரே கோப்பை 2025 தொடரில் டெல்லி அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். அதன்படி, டிசம்பர் 24, 2025 அன்று ஆந்திராவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் அவர் களமிறங்கவுள்ளார். இந்த தகவலை டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரோகன் ஜெட்லி உறுதிப்படுத்தியுள்ளார்.
கோலி மற்றும் ரோகித் இருவரும் ஓய்வு பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, “நீங்கள் எத்தனை கட்டை போட்டாலும், நாங்கள் அதை முறியடித்து களமிறங்குவோம்” என்பதைப் போல, இந்த முடிவு இந்திய கிரிக்கெட்டில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோலி கடைசியாக விஜய் ஹசாரே கோப்பையில் விளையாடியது 2010 ஆம் ஆண்டு. இப்போது, 37 வயதில் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் இறங்குவது, அவரது கிரிக்கெட்டின் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்துகிறது.
