Amaran Review: அமரன் விமர்சனம் - சிவகார்த்திகேயனின் வேறலெவல்!

Amaran Review: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது. 

Oct 31, 2024 - 14:54
Amaran Review: அமரன் விமர்சனம் - சிவகார்த்திகேயனின் வேறலெவல்!

Amaran Review: அமரன் விமர்சனம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது. 

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். 

முகுந்த் வரதராஜனின் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்களை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தை பார்த்த ராணுவ அதிகாரிகளும் கூட இப்படத்தை பாராட்டியுள்ளனர்.

தீபாவளி வெளியீடாக அமரன் படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முதல் காட்சி 9 மணி என்றாலும் மற்ற மாநிலங்களில் அதிகாலையிலேயே திரையிடப்பட்டது. 

மேலும், சினிமாவில் சில முக்கிய இயக்குனர்கள் இப்படத்தை பார்த்துள்ளனர். இவர்கள் எல்லோரும் அமரன் படம் எப்படி இருக்கிறது என்பதை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

சினிமாவிலிருந்து முதல் நபராக இயக்குனர் அட்லி அமரன் படத்தை பெரிதும் பாராட்டி டிவிட் போட்டிருக்கிறார். ஹாட்ஸ் ஆப் டூ இயக்குனர் ராஜ்குமார், என்ன நடிப்பு சிவகார்த்திகேயன்.. நீ உன்னுடைய சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறாய்.. சாய்பல்லவி அருமையாக நடித்திருக்கிறார். படத்தின் எடிட்டிங் அற்புதமாக இருக்கிறது. இந்த படத்தை தயாரித்த கமல் சாருகு ஒரு ஸ்பெஷல் நன்றி.. கண்டிப்பாக அமரன் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத படமாக இருக்கும்’ என பதிவிட்டிருக்கிறார்.

ஒருபக்கம் படம் பார்த்த சிலர் படம் சிறப்பாக இருப்பதாகவும் படம் முடிந்ததும் எல்லோரும் எழுந்து நின்று கைத்தட்டுவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். மொத்தத்தில் இந்த படம் எல்லோருக்கும் பிடித்த ஒரு படமாகவும், தேசப்பற்றை உணரவைக்கும் படமாகவும் வெளிவந்திருக்கிறது என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!