மும்பை அணி தலையில் விழுந்த இடி.. கைவிரித்த ஹர்திக் பாண்டியா... என்னா ட்விஸ்ட்! 

ஐபிஎல் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட குஜராத் அணி, ஹர்திக் பாண்டியாவை தாங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தான் கேப்டன் என்றும் அறிவித்து உள்ளது.

மும்பை அணி தலையில் விழுந்த இடி.. கைவிரித்த ஹர்திக் பாண்டியா... என்னா ட்விஸ்ட்! 

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் ட்ரான்ஸ்ஃபர் தொடங்கிய நிலையில், குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது .

மும்பை அணியில் போதிய ஆல்ரவுண்டர் இல்லாததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இதற்கான பணத்தை மும்பை அணி குஜராத் இடம் வழங்கியதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவித்தன. 

இந்த நிலையில் ஐபிஎல் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட குஜராத் அணி, ஹர்திக் பாண்டியாவை தாங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தான் கேப்டன் என்றும் அறிவித்து உள்ளது.

தோனி விளையாடுவது உறுதியானது.. ஆனால்  கேப்டன் விசயத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள டிவிஸ்ட்!

இதனால் மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை பணம் கொடுத்து வாங்கி விடலாம் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அது நடக்காமல் போய்விட்டதால், இதுதான் இந்த வருடத்தில் பெரிய ட்விஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது. 

மும்பை அணிக்கு தாம் மீண்டும் வருவதில்லை என முடிவெடுத்த ஹர்திக் பாண்டியா அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு குஜராத் அணியிலே தங்கிவிட்டார்.

இந்த நிலையில் ஐபிஎல் அணிகள் வீரர்களை தங்களுக்குள் மாற்றிக் கொள்ளும் காலம் டிசம்பர் 12ஆம் தேதி வரை இருப்பதால், ஹர்திக் பாண்டியாவை மும்பை அணிக்கு கொண்டுவர அந்த அணி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...