பும்ரா மீது பாய்ந்த ஐசிசி நடவடிக்கை.. ஆனால் அதிலும் ஒரு டிவிஸ்ட்.. என்ன தெரியுமா?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பும்ரா மீது பாய்ந்த ஐசிசி நடவடிக்கை.. ஆனால் அதிலும் ஒரு டிவிஸ்ட்.. என்ன தெரியுமா?

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் 41 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் 81வது ஓவரில் பும்ரா ஓவரை இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆலி போப் அடித்து விட்டு ரன் ஓடினார்.

அப்போது பும்ரா பேட்ஸ்மேனுக்கு வழி கொடுக்காமல் அங்கே நின்று கொண்டு ஆலி போப் மீது தள்ளியதாக கூறப்படுகிறது. எனினும் பும்ரா உடனடியாக மன்னிப்பும் கேட்டுவிட்டார். 

இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி... விலகிய கேஎல் ராகுல்... 3 வீரருக்கு வாய்ப்பு... இக்கட்டில் பிசிசிஐ !

எனினும் இந்த நடவடிக்கை ஆலி போப்பை கோபமடைய செய்தது. இது குறித்து நடுவரிடம் அவர் புகார் அளித்தார். இந்த நிலையில் பும்ரா செய்தது ஐசிசி விதி 2.12 படி தவறு என்று தெரியவந்தது. இதனால் பும்ராவுக்கு ஒரு அபராத புள்ளி வழங்கப்பட்டது. 

எனினும் கடந்த 24 மாதங்களில் பும்ரா பெறும் முதல் அபராத புள்ளி இது என்பதுடன், களத்தில் பும்ரா எப்போதும் அமைதியாக நடந்து கொள்வதால் இதுதான் முதல் முறை.  இதனால் பும்ராவுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. 

எனினும், அடுத்த இரண்டு வருடத்தில் பும்ரா இரண்டு அபராத புள்ளிகளை வாங்கினால், அவர் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.

அதாவது இரண்டு வருடத்திற்குள் ஒரு வீரர் 3 அல்லது 4 அபராத புள்ளியைப் பெற்றால், அவர் ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் அல்லது டி20 போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...