இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி... விலகிய கேஎல் ராகுல்... 3 வீரருக்கு வாய்ப்பு... இக்கட்டில் பிசிசிஐ !

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி... விலகிய கேஎல் ராகுல்... 3 வீரருக்கு வாய்ப்பு... இக்கட்டில் பிசிசிஐ !

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி நட்சத்திர வீரர் கே எல் ராகுல் விலகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் கோலி இல்லாத நிலையில், இந்திய அணியில் கே எல் ராகுலும் ஜடேஜாவும் அபாரமாக விளையாடிய வீரர்கள் முக்கியமானவர்களாக உள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து, இந்திய அணியின் நட்சத்திர வீரரும் விராட் கோலி இடத்தில் களம் இறங்கிய கே எல் ராகுல் தற்போது காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் இருந்து விலகியமை இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

முதல் இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 123 பந்துகளில் 86 ரன்கள் எடுத்த கே எல் ராகுல், இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 48 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். 

ஏற்கனவே விராட் கோலி இல்லாத நிலையில் தற்போது கே.கே.எல் ராகுலும் ஜடேஜாவும் விலகி இருப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

எனினும் தற்போது இந்திய அணியில் ரஞ்சி கிரிக்கெட்டில் சதம் சதமாக அடித்து வரும் சர்பிராஸ் கான் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய சீனியர்கள் எதிரான பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்திருந்தார். 

இந்த நிலையில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதனால் ஜடேஜாவின் இடத்திற்கு சுந்தர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தருக்கு பேட்டிங்கும் நன்றாக வரும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோன்று இடது கை சுழற் பந்துவீச்சாளர் சௌரப் குமார் மூன்றாவது வீரராக அணியில் சேர்க்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...