கிரிக்கெட்டில் தங்கம்.. போட்டியே நடக்காமல் வென்ற இந்திய அணி.. எப்படி? புது வரலாறு! 

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்றது.

கிரிக்கெட்டில் தங்கம்.. போட்டியே நடக்காமல் வென்ற இந்திய அணி.. எப்படி? புது வரலாறு! 

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஆப்கானிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தரவரிசைப்படி இந்தியா முன்னிலையில் இருந்ததால் இந்தியா தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

அரை இறுதியில் வங்கதேச அணியை இந்தியாவும், பாகிஸ்தான் அணியை ஆப்கனிஸ்தான் அணியும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தன.

இந்த இரு அணிகள் இடையே ஆன இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் ஆப்கன் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்தது. ஆனாலும், தொடர்ந்து அந்த அணி ரன் குவிக்க தவறவில்லை. ஒரு ஓவருக்கு 6 ரன் என்ற ரன் ரேட்டை தக்க வைத்தது அந்த அணி.

இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ஷாபாஸ் அஹமத் என மூன்று ஸ்பின் பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தனர் ஆப்கன் பேட்ஸ்மேன்கள். ஆனால், ரவி பிஷ்னோய் வீசிய ஸ்பின் பந்துகளில் பெட்டிப் பாம்பாய் அடங்கியதால் ரன் ரேட் ஆறை தாண்டவில்லை. ஆப்கானிஸ்தான் 18.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 112 ரன்கள் எடுத்து இருந்த போது மழை பெய்தது.

ஒரு மணி நேரத்துக்கும் மழை பெய்த நிலையில் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தரவரிசைப்படி இந்தியா முன்னணியில் இருந்ததால் இந்தியா தங்கம் வென்றதாகவும், ஆப்கானிஸ்தான் வெள்ளி வென்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக மகளிர் கிரிக்கெட் அணியும் கிரிக்கெட்டில் தங்கம் வென்று இருந்தது. முதன்முறையாக ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்ற இந்தியா மகளிர் பிரிவு, ஆடவர் பிரிவு என இரண்டிலும் தங்கம் வென்று அசத்தி இருக்கிறது.

இறுதிப் போட்டிக்கு முன் பாகிஸ்தான் - வங்கதேசம் மோதிய வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டி மழையால் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது, அந்தப் போட்டியில் வங்கதேசம் கடைசி ஓவரில் 20 ரன்கள் அடித்து அதிரடியாக வெண்கலம் வென்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...