சாதனையை நோக்கி தமிழக வீரர் அஸ்வின்.. ஆனால் அதில் ஒரு சிக்கல்... பிசிசிஐ இடமளிக்குமா?

அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 94 போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 

சாதனையை நோக்கி தமிழக வீரர் அஸ்வின்.. ஆனால் அதில் ஒரு சிக்கல்... பிசிசிஐ இடமளிக்குமா?

இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் இன்று தொடங்குகிறது. 

இந்த தொடரில் விளையாடும் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஒரு மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.

உலகக் கோப்பை தோல்விக்கு இதுதான் மருந்தா? இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரோகித் எச்சரிக்கை!

ஆனால், அது அத்தனை இலகுவான காரியம் அல்ல, அதில் ஒரு சிக்கலும் இருக்கிறது. தற்போது அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 94 போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 

இந்தத் தொடரில் அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினால் 500 விக்கெட்டுகளை தொட்ட இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். மேலும் 500 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய இந்திய வீரர் மற்றும் உலகில் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற வாய்ப்பு உள்ளது. 

தற்போது 37 வயதாகும் அஸ்வின், தமக்கு கிடைத்த போட்டிகளில் எல்லாம் சிறப்பாக விளையாடினால் மட்டுமே அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற கும்ப்ளேவின் சாதனையை முறியடிக்க முடியும்.

ஆனால் இந்திய அணி நிர்வாகம் எப்போதெல்லாம் வெளிநாட்டில் விளையாடுகிறார்களோ அப்போதெல்லாம் அஸ்வினை உட்கார வைத்துவிட்டு ஜடேஜாவை சுழற் பந்துவீச்சாளராக சேர்க்கிறார்கள். 

அஸ்வின் போல உலகின் தலைசிறந்த வீரர்களை வெளிநாடுகளில் விளையாட வைக்காமல் இந்திய அணி பெரும் தவறை செய்கிறது. இன்றைய ஆட்டத்தில் கூட ஜடேஜாவுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

கங்குலி - தோனியால்  கூட முடியாததை செய்து காட்டுவாரா ரோகித் சர்மா? கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு!

இது அஸ்வினுக்கு செய்யப்படும் மிகப்பெரிய அநீதி என்று ரசிகர்கள் கூறுவதுடன், 489 விக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து சதம் அடித்த ஒரு வீரரை நம்பாமல் ஜடேஜா, சர்துல் தாக்கூர் என தேடுவதே அஸ்வினுக்கு செய்யும் அவமரியாதை என்று அங்கலாய்க்கின்றனர்.

இந்த இரண்டு போட்டிகளிலும் அஸ்வின் விளையாடினால் நிச்சயமாக 500 விக்கெட்டு என்ற சாதனையை அஸ்வின் பெறுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்து இருக்கின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...