உலகக் கோப்பை தோல்விக்கு இதுதான் மருந்தா? இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரோகித் எச்சரிக்கை!

தென்னாபிரிக்க ஆடுகளத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கி இருக்கிறார். 

உலகக் கோப்பை தோல்விக்கு இதுதான் மருந்தா? இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ரோகித் எச்சரிக்கை!

1992 ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகள் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மோதி வருகின்றன. ஆனால் இந்த 31 ஆண்டுகளில் ஒரு முறை கூட இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரை கூட தென்னாப்பிரிக்க மண்ணில் கைப்பற்றவில்லை.

இந்த நிலையில், உலக கோப்பையில் தோல்வி அடைந்த கவலையில் இருக்கும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இந்த வரலாற்றை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. 

இதனை செய்து காட்டினால் அது ரோகித் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். இதனால் ரோகித் சர்மா,விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற வெறியில் உள்ளனர்.

கங்குலி - தோனியால்  கூட முடியாததை செய்து காட்டுவாரா ரோகித் சர்மா? கிடைத்துள்ள இறுதி வாய்ப்பு!

இப்படியான சூழலில், தென்னாபிரிக்க ஆடுகளத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கி இருக்கிறார். 

தென் ஆப்பிரிக்க ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடனும் நிதானமாகவும் விளையாட வேண்டும் என்றும் இங்கு தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் விளையாடினால் நிச்சயமாக நெருக்கடியை சந்திக்க வேண்டியேற்படும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார்.

அடிக்க வேண்டிய பந்தை அடித்து விளையாடுவதுடன், பவுலர்கள் தவறு செய்யும் வரை காத்திருந்து அதனை அடியுங்கள் என்றும் எந்த ஷாட்டுகளை அடித்தால் ரன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொண்டு அதனை களத்தில் வெளிப்படுத்துங்கள் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார். 

மேலும் இன்றைய ஆட்டத்தில் விக்கெட் கீப்பிங் பணியை கே எல் ராகுல் தான் செய்வார் என்று குறிப்பிட்டுள்ள ரோகித் சர்மா, சவால்களை தாமே விரும்பி ஏற்றுக்கொண்டு அதில் சிறப்பாக செயல்பட்டு கே.எல் ராகுல் வெற்றி காண்பதாக பாராட்டியுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டி... இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி? ரோகித் சர்மாவின் முடிவு என்ன?

கடந்த இரண்டு முறை தாங்கள் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றியின் அருகே வந்ததை சுட்டிக்காட்டியதுடன், தற்போது அதே நம்பிக்கையுடன் தற்போது மீண்டும் களமிறங்குகிறோம் என்று கூறியுள்ளார்.

அதேநேரம், உலகக் கோப்பையில் அடைந்த தோல்விக்கு தென்னாப்பிரிக்கா தொடர் மருந்தாக இருக்குமா என்று எனக்கு தெரியாது என்றும், உலகக் கோப்பை என்பது உலக கோப்பை தான் என்று ரோகித் சர்மா கூறி இருக்கிறார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...