புறக்கணிப்பட்ட வீரர்.... அந்த இளம் வீரரை அணியில் சேர்க்க அஜித் அகார்கர் உறுதி?

ஐபிஎல் 17ஆவது சீசனில் பிட்ச்கள் பேட்டர்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார்கள். 

புறக்கணிப்பட்ட வீரர்.... அந்த இளம் வீரரை அணியில் சேர்க்க அஜித் அகார்கர் உறுதி?

ஐபிஎல் 17ஆவது சீசனில் பிட்ச்கள் பேட்டர்களுக்கு சாதகமாக உருவாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார்கள். 

இதனால், நல்ல பந்துவீச்சாளர்கள் கூட அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருகிறார்கள். ஆனால், கேப்டன்ஸி அழுத்தம் காரணமாக, ஐபிஎல் கேப்டன்கள் ஷுப்மன் கில், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா போன்றவர்கள், தொடர்ந்து அதிரடியாக விளையாட முடியவில்லை.

குறிப்பாக, ஹர்திக் பாண்டியாவின் பார்ம் மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸுக்கு கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு, பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் ஹர்திக் பாண்டியா சொதப்பி வருகிறார்.

ஹர்திக் பாண்டியா, காயம் காரணமாக நீண்ட கால ஓய்வுக்கு பிறகு ஐபிஎலுக்கு திரும்பி உள்ள நிலையில், அவரது பந்துவீச்சில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. முன்புபோல், அவரால் வீச முடியவில்லை. இதனால், ஓவருக்கு சராசரியாக 10+ ரன்களை விட்டுக்கொடுக்கிறார்.

மேலும், பேட்டிங்கிலும் அதிரடி காட்ட முடியவில்லை. சொதப்பல் பந்துகளை கூட அவரால் தூக்கியடிக்க முடியவில்லை. இது ஹர்திக் பாண்டியாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதனால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருக்கிறது. 

ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும், நீண்ட ஓய்வு வழங்கி மாற்றாக ஷிவம் துபேவை சேர்க்க, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதனால், பயிற்சியின்போது ஷிவம் துபேவை பந்துவீச வைத்து, அவரது திறமையை பரிசோதித்து வருகிறார்கள். துபேவும் சிறப்பாகதான் பந்துவீசுகிறாராம்.

இந்நிலையில், டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியில், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக ஷிவம் துபேவை விளையாட வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ மீட்டிங்கில் பேசிய அஜித் அகார்கர், ''தற்போதைய நிலைமையில், ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சைவிட ஷிவம் துபேவின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது. 

மேலும், பேட்டிங்கிலும் துபே அதிரடி காட்டி வருகிறார். இதனால், லெவன் அணியில் துபேவை ஆட வைப்பதுதான் சரியானதாக இருக்கும்'' என டிராவிட், ரோஹித் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் பங்கேற்ற அணி மீட்டிங்கில், அகார்கர் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...