ரிஷப் பண்ட் காயம்...  பும்ரா நிலை என்ன? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ன செய்யபோகிறார் கம்பீர்!

பண்ட் அடுத்த டெஸ்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், நான்காவது டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு இருக்கின்றது.

ரிஷப் பண்ட் காயம்...  பும்ரா நிலை என்ன? அடுத்த போட்டியில் விளையாடுவாரா? என்ன செய்யபோகிறார் கம்பீர்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அடுத்த புதன்கிழமை தொடங்கவுள்ளதுடன், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் இரண்டாவது இன்னிங்ஸில் தேவை இல்லாமல் ரன் ஓடி ஆட்டமிழந்தமை தான் போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரிஷப் பண்ட் களத்தில் நின்று இருந்தால் நிச்சயம் 100 ரன்களுக்கு மேல் அடித்திருப்பார். இந்த சூழலில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது   ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த நிலையில், பந்து ஒன்று அவருடைய கையை தாக்கியது. 

இதனால் காயமடைந்த அவர் அந்த டெஸ்ட் முழுவதும் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. எனினும் பேட்டிங் செய்ய வந்தார். முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் எடுத்த பண்ட் இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். 

இந்த நிலையில், பண்ட் அடுத்த டெஸ்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், நான்காவது டெஸ்ட் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வு இருக்கின்றது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய அணி கேப்டன் கில், ரிஷப் பண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்து கொண்டார். அதில் எந்த ஒரு அபாயமும் இல்லை என தெரிகிறது. இதனால் பண்ட் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதில் எந்த ஒரு குழப்பமும் இருக்காது என்று கூறினார்.

இதேவேளை, பும்ராவின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு அவர் இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டியில் தான் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பும்ரா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டு மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு திரும்பினார். 
இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு அவர் திரும்புவாரா இல்லை ஓய்வு எடுத்துக் கொண்டு கடைசி டெஸ்டில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது ஒரு வாரம் ஓய்வு உள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதால், கம்பீர் என்ன முடிவெடுக்க போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. 

இந்த நிலையில், பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா என்பது குறித்து உங்களுக்கு விரைவில் தெரியவரும் என்று இந்திய அணி கேப்டன் கில், கூறியுள்ளார்.