திடீரென விலகிய கோலி... இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்? முழு விவரம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.

Jan 23, 2024 - 12:01
திடீரென விலகிய கோலி... இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்? முழு விவரம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று விராட் கோலி முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகிவிட்டார்.

இதனால் விராட் கோலி இடத்திற்கு மாற்று வீரராக யாரை தேர்வு செய்வது  என்ற குழப்பத்தில் பிசிசிஐ உள்ளது. 

இந்த நிலையில் கோலி இல்லாத இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்குவார்கள்.

விராட் கோலியின் இடத்துக்கு வர 4 பேருக்கு வாய்ப்பு... குழப்பத்தில் பிசிசிஐ!

மூன்றாவது வீரராக கில் விளையாட விராட் கோலி இல்லாத நிலையில் நம்பர் நான்காவது வீரராக யார் களமிறங்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், கே எல் ராகுலை விராட் கோலி இடத்தில் களமிறக்கி விட்டு ராகுலுக்கு பதிலாக கூடுதலாக ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பயன்படுத்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி நான்காவது இடத்தில் கே.எல். ராகுலும் ஐந்தாவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் களமிறங்க, ஆறாவது இடத்தில் ஜடேஜாவும் ஏழாவது இடத்தில் கே எஸ் பரத் ஆகியோர் விளையாட வாய்ப்பு உள்ளது.

8ஆவது இடத்தில் அக்சர் பட்டேலும், 9ஆவது இடத்தில் அஸ்வினும், 10ஆவது இடத்தில் முகமது சிராஜூம், 11ஆவது இடத்தில் பும்ராவும் விளையாடலாம்.

இதேவேளை, இந்த டெஸ்ட் அணியில் 3 ஸ்பின்னர்கள் மற்றும் 2 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய டெஸ்ட் அணியின் உத்தேச பிளேயிங் லெவன்

  1. ஜெய்ஸ்வால்
  2. ரோகித் சர்மா
  3. கில்
  4. கே.எல். ராகுல்
  5. ஸ்ரேயாஸ் ஐயர்
  6. ஜடேஜா
  7. அக்சர் பட்டேல்
  8. அஸ்வின்
  9. கே.எஸ். பரத்
  10. முகமது சிராஜ்
  11. பும்ரா
Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!