இத்தனை  பேர் ஓய்வு பெற்றும் அணியில் வாய்ப்பு இல்லை.. நொந்து போன வீரர்.. நடந்தது என்ன?

இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆதிக்கத்தால் குல்தீப் யாதவ் கடந்த 7 வருடங்களாக வாய்ப்பின்றித் தவித்து வருகின்றார்.

May 16, 2025 - 16:10
இத்தனை  பேர் ஓய்வு பெற்றும் அணியில் வாய்ப்பு இல்லை.. நொந்து போன வீரர்.. நடந்தது என்ன?

இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆதிக்கத்தால் குல்தீப் யாதவ் கடந்த 7 வருடங்களாக வாய்ப்பின்றித் தவித்து வருகின்றார்.

13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 24 இன்னிங்ஸ்களில் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள குல்தீப் யாதவ்வின் பந்துவீச்சு சராசரி 22.16 ஆக உள்ளதுடன், ஸ்ட்ரைக் ரேட் 37.3  ஆக உள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வினை விடச் சிறந்த பௌலிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ள குல்தீப் யாதவ்வுக்கு, அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால், இனி டெஸ்ட் அணியில் இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 

ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் பங்கேற்பது சந்தேகமே என பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான நிலையில்,  இந்திய அணியில் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களே போதுமானது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அதிலும் ஆல்ரவுண்டர்களை அணியில் வைத்து அதன் மூலம் ஒரு இடத்தை கூடுதலாக வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அளிக்க முடியும் எனப் பயிற்சியாளர் கம்பீர் திட்டமிட்டு உள்ளார்.

அதன்படி ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல் ஆகிய மூவரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதுடன், அவர்களில் ஒருவர் அல்லது இருவர் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கலாம்.

ஒருவேளை, குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டாலும், பிளேயிங் லெவனில் அவர் முதன்மை சுழற்பந்துவீச்சாளராக இருக்க மாட்டார் என்றும், ரவீந்திர ஜடேஜாவே முதன்மை சுழற்பந்துவீச்சாளராகச் செயல்படுவார் என்றும் கூறப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான குல்தீப் யாதவ், இந்த ஏழு ஆண்டுகளில் 13 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கின்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!