முதல் டெஸ்ட் போட்டிக்கு மோசமான பிளான்... ரோஹித் சர்மாவை கோர்த்துவிட்ட பிசிசிஐ!

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் இடைவேளைக்குள் அந்த அணி நல்ல ஸ்கோரை குவித்து விடும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கு மோசமான பிளான்... ரோஹித் சர்மாவை கோர்த்துவிட்ட பிசிசிஐ!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடக்கு உள்ளது. அந்த மைதானம் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காது என கூறப்படும் நிலையில், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இது பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதாவது, இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து தான் இந்திய அணி திட்டமிடும்.

ஆனால், இந்த முறை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள முதல் போட்டியை சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காத ஹைதராபாத்தில் நடக்கும் வகையில் பிசிசிஐ திட்டமிட்டு இருக்கிறது.

இதானால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் இடைவேளைக்குள் அந்த அணி நல்ல ஸ்கோரை குவித்து விடும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.

அவ்வாறு நடந்துவிட்டால், கேப்டன் ரோஹித் சர்மா எப்படி பந்துவீச்சாளர்களை பயன்படுத்தப் போகிறார் என்பதை வைத்து தான் போட்டியின் முடிவு அமையும் என கவாஸ்கர் கூறி உள்ளார்.

இது,  ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனென்றால், தற்போது இந்திய டெஸ்ட் அணியில் திறமையான நான்கு சுழற் பந்துவீச்சாளர்களும் உள்ளனர். 

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் என எப்படியும் ஒவ்வொரு போட்டியிலும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்தும் என கூறப்பட்டு வருகிறது. 

ஆனால், ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சு எடுபடாமல் போனால் இந்தியா வசமாக சிக்கிக் கொள்ளும். முதல் டெஸ்ட்டில் இந்தியா தோற்றால் கடைசியில் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சாளர்களை சரியாக பயன்படுத்தவில்லை என்ற விமர்சனம் வரும்.

இதானால், டெஸ்ட் போட்டி அட்டவணையின் மூலமே ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ தலைவலியை கொண்டு வந்துள்ளதாக பார்க்கப்படுகின்றது.

ஹைதராபாத் பிட்ச் முதல் இரண்டு நாட்களுக்கு மட்டுமே சுழற் பந்துவீச்சுக்கு பெரிதாக ஒத்துழைக்காது என்பதுடன், மூன்றாவது நாளில் இருந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறும் என கூறப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...