தோனி - ருதுராஜ் சென்னையில் திடீர் சந்திப்பு.. சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னையில் திடீரென சந்தித்துப் பேசியது  ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தோனி - ருதுராஜ் சென்னையில் திடீர் சந்திப்பு.. சிஎஸ்கே அணியில் முக்கிய மாற்றம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் சென்னையில் திடீரென சந்தித்துப் பேசியது  ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இந்த சந்திப்புக்குப் பின்னால் அணியில் ஏதேனும் பெரிய மாற்றம் நிகழப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்துக்கு முன்னர் சில வீரர்களை அணி மாற்றம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த சந்திப்பு எங்கு, எப்போது நடந்தது என்பது குறித்த உத்தியோகப்பூர்வ தகவல்வெளியாகவில்லை. எனினும், ஐபிஎல் ஏலம் நெருங்கி வரும் இந்தத் தருணத்தில், சிஎஸ்கே அணியின் எதிர்காலம் குறித்து விவாதிக்கவே இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சந்திப்பில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை, சிஎஸ்கே-விற்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக செய்தி பரவி வரும் நிலையில், தோனிக்குப் பிறகு ஒரு அனுபவமிக்க இந்திய விக்கெட் கீப்பர் தேவை என்பதால், சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வருவது குறித்து தோனியும், ருதுராஜும் விவாதித்திருக்கலாம்.

மெகா ஏலத்திற்கு முன்பு, சிஎஸ்கே அணியில் எந்த வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வது, யாரையெல்லாம் ஏலத்திற்கு விடுவிப்பது என்பது குறித்து இந்த சந்திப்பு நடந்திருக்கலாம். சிவம் துபே, மதீஷா பதிரானா போன்ற முக்கிய வீரர்களின் எதிர்காலம் குறித்தும் இதில் பேசப்பட்டிருக்கும்.

ஏலத்தில் எந்தெந்த வீரர்களைக் குறிவைப்பது, அணியின் பலவீனமான இடங்களை எப்படி சரி செய்வது, குறைந்த விலையில் சிறந்த வீரர்களை எப்படி எடுப்பது போன்ற ஏல யுக்திகள் குறித்தும்  தோனியிடம், கேப்டன் ருதுராஜ் ஆலோசனை பெற்றிருக்கலாம்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் அடைந்த நிலையில், பாதி தொடரில் தோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஆனாலும், சிஎஸ்கே அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. மேலும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.

ருதுராஜ் கேப்டனாக இருந்த போதும் களத்தில் சில சமயங்களில் தோனியே முடிவுகளை எடுப்பது போன்ற தோற்றம் காணப்படுகின்றது. எனவே, தலைமைப் பொறுப்பில் ருதுராஜ் எதிர்கொள்ளும் சவால்கள், முடிவெடுப்பதில் உள்ள சுதந்திரம் மற்றும் தோனியுடன் இணைந்து அணியை எப்படி இன்னும் சிறப்பாக வழிநடத்துவது என்பது குறித்தும் இந்த சந்திப்பில் வெளிப்படையாகப் பேசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.