முதல் போட்டியில் தோற்றாலும் இந்தியா தான் தொடரை வெல்லும்.. சொன்னது யார் தெரியுமா?

குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் 5க்கு0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தலைகனத்துடன் பேசி வருகிறார்கள்.

முதல் போட்டியில் தோற்றாலும் இந்தியா தான் தொடரை வெல்லும்.. சொன்னது யார் தெரியுமா?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனையடுத்து, முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணியை விளாசி வருகின்றனர்.

குறிப்பாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் 5க்கு0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்று தலைகனத்துடன் பேசி வருகிறார்கள்.

அத்துடன், சிலர் ரோகித் சர்மாவின் கேப்டன்சியை கடுமையாக சாடியுள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் முதல் டெஸ்டில் இந்தியா தோல்வியை தழுவினாலும் இந்த தொடரை இந்தியா தான் கைப்பற்றும் என்று நம்பிக்கை தரும் விதமான பேசி உள்ளார்.

இந்தியாவுக்கு வில்லன் வீரனை களமிறக்கிய இங்கிலாந்து.. அடுத்த ஆப்பு ரெடி! என்ன செய்ய போகிறார் ரோஹித்!

“முதல் டெஸ்டில் தோல்வியை தழுவியதால் நமது பவுலர்கள் நல்ல வீரர்கள் கிடையாது என்று அர்த்தம் இல்லை. நமது பவுலர்கள் ஏற்கனவே தங்களுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்கள். தோல்வி சில சமயம் நல்லதுக்காக தான் இருக்கும். தோல்வியின் மூலம் நாம் பல பாடங்களை கற்றுக் கொள்ள முடியும்.

நிச்சயம் இந்த தொடரை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. முதல் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

எனினும் இந்தியா மீண்டும் கம் பேக்கை கொடுக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று இர்பான் பதான் கூறி இருக்கின்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...