16 வருடமாக சேப்பாக்கத்தில் தோற்கும் ஆர்சிபி.. கேப்டனான முதல் போட்டியில் ருதுராஜ்க்கு வெற்றி!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் வழி நடத்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணியை புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட ருதுராஜ் வழி நடத்தினார்.
பலம் வாய்ந்த ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக 2008 ஆம் ஆண்டுதான் வெற்றி பெற்றது. இதனால் 16 ஆண்டுகளாக தொடரும் இந்த தோல்வியை ஆர்சிபி தடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தொடக்க வீராக களமிறங்கிய கேப்டன் டுபிளசிஸ் 35 ரன்கள், விராட் கோலி 21 ரன்களும் எடுக்க, மேக்ஸ்வெல், ரஜ்ம்த் பட்டிதார் ஆகியோர் அடுத்தடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினர்.
கேமிரான் கிரீன் 18 ரன்கள் சேர்த்து ஆர் சி பி அணி தடுமாறிய நிலையில் ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் ஆகியோர் ரன்களை சேர்த்தனர்.
அதிரடியாக மாற்றப்பட்ட ஆறு ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள்... முழு விவரம் இதோ!
அனுஜ் ராவ்த் 25 பந்துகளில் 48 ரன்களும் தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 38 ரன்களும் சேர்க்க இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே அணிக்காக தன்னுடைய முதல் போட்டியில் விளையாடிய வங்கதேச வீரர் முஸ்தஃபூர் ரஹ்மான் 29 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் 15 ரன்களில் வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரகானே 27 ரன்களில் வெளியேற, ரச்சின் ரவீந்திரா 37 ரன்கள் சேர்த்தார்.
நியூசிலாந்து வீரரான டாரல் மிட்செல் 22 ரன்கள் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய சிவம் துபே, ஜடேஜா ஜோடியை பிரிக்க முடியாமல் ஆர் சி பி வீரர்கள் தடுமாற சிஎஸ்கே அணி 18.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |