முதல் டெஸ்ட் போட்டி... இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி? ரோகித் சர்மாவின் முடிவு என்ன?
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளதுடன், தென்னாப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்திய அணி ஒருமுறை கூட டெஸ்ட் தொடரில் வென்றதில்லை.
இதனால் இந்திய அணி முதல்முறையாக வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளதுடன், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் சென்சுரியன் ஆடுகளத்தில் ஸ்பின்னர்களுக்கு ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் தான் வேலை இருக்கும் என்ற நிலையில், முகமது ஷமி காயம் காரணமாக விலகியதால் அவர் பதிலாக யார் விளையாடுவார் என்ற விவாதம் எழுந்துள்ளது.
தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா தான் களமிறங்குவார்கள் என்று பார்க்கப்படுகிறது. ஜெய்ஸ்வால் இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடியதில்லை. ரோகித் சர்மாவை பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் அவரின் பேட்டிங் சராசரி 15.37 மட்டும் தான்.
3வது இடத்தில் சுப்மன் கில் களமிறங்கினாலும், இவரும் தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடியதில்லை என்பதால், பெரியளவில் எதிர்பார்க்க முடியாது. வழக்கம் போல் 4வது வீரராக விராட் கோலியும், 5வது இடத்தில் ராகுலும் களமிறங்குவார்கள்.
தென்னாப்பிரிக்கா மண்ணில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 51.35ஆக உள்ளதுடன், கேஎல் ராகுல் 2 முறை தென்னாப்பிரிக்காவில் விளையாடியும், பெரியளவில் சோபிக்கவில்லை.
தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார். இதன்படி பார்த்தால், இந்திய அணியின் பேட்டிங் முழுக்க முழுக்க விராட் கோலி, ரோகித் சர்மாவை நம்பியே இருக்கும். 7வது இடத்தில் ஜடேஜாவும், 8வது இடத்தில் ஷர்துல் தாக்கூரும் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.
பின்வரிசையில் பும்ரா, சிராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம். பிரசித் கிருஷ்ணா மற்றும் முகேஷ் குமார் இருவரில் முகேஷ் குமாரின் செயல்பாடுகளே அதிக திருப்தியளிப்பதால், ரோகித் சர்மா அவரையே அணியில் சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |