இந்த இலங்கை வீரர் சீக்கிரம் அவுட் ஆக்கவில்லை என்றால்.. இந்தியாவுக்கு காத்திருக்கும் கண்டம்
மாத்யூஸ் வந்த பின் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. அவரது அனுபவம் இளம் இலங்கை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் இடையே ஆன முக்கியமான லீக் போட்டி நடைபெற உள்ளது. இலங்கை அணி மோசமான ஃபார்மில் உள்ளது.
தான் ஆடிய ஆறு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அந்த அணி தோல்வி அடைந்தால் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பு பறிபோய்விடும்.
மறுபுறம், இந்திய அணி இலங்கையை வீழ்த்தினால் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த முதல் அணியாக மாறும் இந்தியா.
ஆனால், இந்திய அணிக்கு முட்டுக்கட்டை போட வருகிறார் இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மாத்யூஸ். 2023 உலகக்கோப்பை தொடருக்கான முதற்கட்ட அணியில் மாத்யூஸ் பெயர் இடம் பெறவில்லை.
பல வீரர்கள் இலங்கை அணியில் காயம் அடைந்து தொடரில் இருந்து விலகிய நிலையில், மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டார் அனுபவம் வாய்ந்த ஏஞ்சலோ மாத்யூஸ்.
மாத்யூஸ் வந்த பின் இலங்கை அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. அவரது அனுபவம் இளம் இலங்கை வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.
இதை இந்திய அணி உற்று நோக்க வேண்டும். இது ஒருபுறம் என்றால், மாத்யூஸ் தனிப்பட்ட முறையில் இந்திய அணிக்கு எதிராக அதிரடி ரெக்கார்டு ஒன்றை வைத்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிராக வேற ஒரு பிளான் இருக்கு.. ரோஹித் சர்மா போட்ட திட்டம்.. வெளியான தகவல்!
இந்திய அணிக்கு எதிராக மாத்யூஸ் மூன்று சதங்கள் அடித்துள்ளார். அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மொத்தம் அடித்ததே மூன்று சதங்கள் தான். அது மூன்றுமே இந்தியாவுக்கு எதிராகத் தான் அடித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான அவரது பேட்டிங் சராசரி 53.57 ஆகும், ஸ்ட்ரைக் ரேட் 84.93 ஆகும். அதுவே, இந்திய மண்ணில், இந்தியாவுக்கு எதிராக ஆடும் போது அவரது சராசரி 105.16 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 96.77 ஆகும்.
இதில் இருந்தே மாத்யூஸ் இந்தியாவுக்கு பெரிய சிக்கலாக இருப்பார் என்பதை கணிக்கலாம். மும்பை வான்கடே மைதானம் பேட்டிங் ஆட ஒத்துழைக்கும் என்பதால் மாத்யூஸ் இந்தியாவுக்கு எதிராக அடுத்த சதம் அடிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் கவனமாக இருந்து அவர் விக்கெட்டை சாய்க்க வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |