இலங்கை அணிக்கு எதிராக வேற ஒரு பிளான் இருக்கு.. ரோஹித் சர்மா போட்ட திட்டம்.. வெளியான தகவல்!

மும்பை வான்கடே மைதானம் அவருக்கு பரிச்சயமானது. ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, அந்த மைதானத்தில் அதிக போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிராக வேற ஒரு பிளான் இருக்கு.. ரோஹித் சர்மா போட்ட திட்டம்.. வெளியான தகவல்!

இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி ஆட உள்ள நிலையில் இந்தப் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், தற்போதைய சூழ்நிலையில், அஸ்வின் அணியில் ஆட வாய்ப்பே இல்லை எனவும், குறிப்பாக இலங்கை போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அவருக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள் எனவும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி உள்ளனர். 

ஆனால், அவரை வைத்து தென்னாப்பிரிக்கா போட்டிக்கு வேறு ஒரு திட்டம் தயாராகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த இங்கிலாந்து போட்டியில் வெறும் 229 ரன்கள் அடித்து விட்டு, தரமான பந்துவீச்சால் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 

அந்த பந்துவீச்சு கூட்டணியை மாற்றக் கூடாது என்பதே முக்கியமான காரணமாக கூறப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா மும்பையை சேர்ந்தவர். 

மும்பை வான்கடே மைதானம் அவருக்கு பரிச்சயமானது. ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, அந்த மைதானத்தில் அதிக போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

இந்த நிலையில், அந்த மைதானத்தில் சுழற் பந்துவீச்சுக்கு அதிக வேலை இல்லை என்பது ரோஹித் சர்மாவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் நிச்சயம் ரோஹித் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் தேர்வு செய்வார்.

கூட்டம் கூட்டமாக கனடாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டினர்.. என்ன நடக்குது?

அந்த இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தான். அஸ்வின் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராகவே உத்தேச அணியில் இடம் பெற்று இருக்கிறார் என்பதால் அவருக்கு போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்காது.

அப்படி என்றால் அஸ்வினை எதற்காக அணியில் தேர்வு செய்து வைத்துள்ளார் ரோஹித் சர்மா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விட, அடுத்து நடைபெற உள்ள தென்னாப்பிரிக்கா போட்டியின் போது தெரிய வரும் என்கிறார்கள். ஆம், அந்தப் போட்டி நடக்க உள்ள கொல்கத்தா மைதானத்தில் சுழற் பந்துவீச்சு எடுபடும்.

அத்துடன் தென்னாப்பிரிக்கா அணியில் க்விண்டன் டி காக், டேவிட் மில்லர் என இரண்டு முக்கிய இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். 
அஸ்வின், இடது கை பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை வீழ்த்துவதில் சிறப்பாக செயல்படுவார் என்பதால் அந்தப் போட்டியில் அவரை ரோஹித் சர்மா ஆட வைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp