சொல்லக் கூடாத உண்மையை சொன்ன ரோஹித் சர்மா.. இப்படி செய்யலாமா தலைவரே? 

உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி அடுத்து, இலங்கை அணிக்கு எதிராக மோத உள்ளது. அந்தப் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.

சொல்லக் கூடாத உண்மையை சொன்ன ரோஹித் சர்மா.. இப்படி செய்யலாமா தலைவரே? 

உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி அடுத்து, இலங்கை அணிக்கு எதிராக மோத உள்ளது. அந்தப் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மும்பையில் காற்று மாசு அதிகரித்து சுவாசப் பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது குறித்து ரோஹித் சர்மா தன் பதிவில் புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார்.

அதனால், அபப்டி ஒரு மோசமான சூழ்நிலையில் உலகக்கோப்பை போட்டியை நடத்த வேண்டுமா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும், மற்ற அணிகளும் மும்பையில் உலகக்கோப்பை போட்டிகளில் ஆடுவது குறித்து புகார் தெரிவிக்க ஒரு வாய்ப்பை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவே ஏற்படுத்தி விட்டார் என பிசிசிஐ வட்டாரத்தில் அவர் மீது வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது மும்பை நகரத்தில் காற்று தர அளவீடு 150 என்ற அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. 

காற்று தர அளவீட்டின்படி 50 வரை நல்ல காற்று, 51 - 100 வரை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிலான காற்று, 101 - 200 வரை சுமாரான காற்று, 201 - 300 வரை மோசமான காற்று, 301 - 400 வரை மிக மோசமான காற்று, 400க்கு மேல் அபாய நிலையில் உள்ள காற்று ஆகும்.

அந்த வகையில் ஒட்டுமொத்த மும்பை காற்றின் தரம் 150 க உள்ளது. அதாவது சுமாரான அளவில் உள்ளது. அதே சமயம், நகரின் முக்கிய இடங்களில் 250-ஐ ஒட்டி உள்ளது காற்றின் தரம். அதாவது மோசமான காற்றாக உள்ளது.

இதற்கு முன் மும்பையில் ஆடிய இங்கிலாந்து வீரர்கள் மோசமான காற்றால் பாதிக்கப்பட்டனர். அந்த அணியின் மூத்த வீரர் ஜோ ரூட் கூறுகையில், எங்கள் வீரர்களால் சுவாசிக்கவே முடியவில்லை. மிகவும் கடினமாக இருந்தது என குறிப்பிட்டார்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்த ரீல்ஸில் வானம் புகை மண்டலமாக இருப்பதை புகைப்படமாக பகிர்ந்து, "மும்பை என்ன ஆச்சு?" எனக் கேட்டு இருக்கிறார் ரோஹித் சர்மா. 

இந்த பதிவு தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் விவாதப் பொருளாக மாறினால் உலகக்கோப்பை தொடரை நடத்தும் பிசிசிஐக்கு அது பின்னடைவாக அமையும்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...