பும்ராவுக்கு இனி துணை கேப்டன் பதவி கூட கிடையாது.. பிசிசிஐ அதிரடி தீர்மானம்!

இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டன் பதவி கூட ஜஸ்பிரித் பும்ரா அளிக்கப்படாது என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

May 5, 2025 - 13:33
பும்ராவுக்கு இனி துணை கேப்டன் பதவி கூட கிடையாது.. பிசிசிஐ அதிரடி தீர்மானம்!

இந்திய டெஸ்ட் அணியில் துணை கேப்டன் பதவி கூட ஜஸ்பிரித் பும்ரா அளிக்கப்படாது என பிசிசிஐ வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 20 முதல் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதுடன், ஐபிஎல் தொடர் முடிந்த சில வாரங்களில், இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றது.

இந்தத் தொடருக்கான கேப்டனாக ரோகித் சர்மா செயற்படுவார் என பிசிசிஐ தகவல்கள் சில வாரங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது.

தற்போது, வேறு கேப்டனைத் தேர்வு செய்ய முடியாத நிலை இருப்பதால், அதுவரை ரோகித் சர்மாவே இந்திய அணியின் கேப்டனாகத் தொடர்வார் என கூறப்படும் நிலையில், அடுத்த கேப்டனை உருவாக்க வேண்டிய தேவையும் பிசிசிஐ-க்கு ஏற்பட்டு உள்ளது.

இதனையடுத்து, இந்திய டெஸ்ட் அணியின் வருங்கால கேப்டனாக  பும்ரா இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது, அவருக்கு கேப்டன் பதவி அளிக்க வேண்டாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. 

ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதுடன், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டில் அவர் காயம் காரணமாக பல்வேறு போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருந்தார். 

காயத்திலிருந்து மீண்டு வந்த அவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஐந்து போட்டிகளிலும் விளையாடிய நிலையில், கடைசி போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. 

அதனால், ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு வாரங்கள் வரை ஜஸ்பிரித் பும்ராவால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியவில்லை. தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் ஜஸ்பிரித் பும்ரா, அதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற இருக்கிறார். 

அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது காயம் ஏற்பட்டு விட்டால் அது சிக்கலான நிலைமையை உருவாக்கும் என்பதால், அந்தத் தொடரின் இடையே அவருக்கு ஒரு போட்டியில் ஓய்வு அளிக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 

அதன்படி, ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் விளையாடிய பின்னர், மூன்றாவது போட்டியில் ஓய்வு எடுக்க வாய்ப்பு உள்ளதுடன்,  அவருக்கு மேலும் அழுத்தம் அளிக்கும் வகையில் கேப்டன் பதவியை அளிக்க வேண்டாம் என்ற முடிவில் பிசிசிஐ இருக்கிறது. 

அதனால் அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது துணை கேப்டன் பதவி அளிக்கப்படாது என்றும், சுப்மன் கில் அல்லது ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை துணை கேப்டனாக நியமிக்கலாம் என்ற முடிவில் தேர்வு குழு உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.

இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் இது குறித்து ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி நிர்வாகத்துடன் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!