19 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..  தமிழக வீரரருக்கு இடம்.. நட்சத்திர வீரர் நீக்கம்!

எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ தேர்வு செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Apr 16, 2025 - 08:52
19 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு..  தமிழக வீரரருக்கு இடம்.. நட்சத்திர வீரர் நீக்கம்!

எதிர்வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் இந்தியா, இங்கிலாந்து இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளதுடன், இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை, பிசிசிஐ தேர்வு செய்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேப்டன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோர் ஓபனர்கள் இடங்களில் இருப்பார்கள் எனவும், ரோஹித் சர்மா சொதப்பும் பட்சத்தில், கே.எல்.ராகுல் மாற்று ஓபனராக விளையாடுவார் என்றும் இல்லையென்றால், மிடில் வரிசையில் செயல்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், ஷுப்மன் கில், விராட் கோலி, கருண் நாயர், சாய் சுதர்ஷன், நிதிஷ் ரெட்டி, ரிஷப் பந்த் மற்றும் துரூவ் ஜோரல் ஆகியோர் மிடில் வரிசையில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

அண்மைகாலமாக முரட்டு பார்மில் கருண் நாயர் உள்ளதால்தான் சர்பரஸ் கானை நீக்கிவிட்டு, கருண் நாயரை அணிக்குள் கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, வாஷிங்டன் சுந்தர் டெஸ்டில் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதால், அக்சர் படேலை நீக்கி, சுந்தரை சேர்க்க முடிவு செய்துள்ளதுடன், ரவீந்திர ஜடேஜா, ஷர்தூல் தாகூர் ஆகியோரும் ஆல்-ரவுண்டர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

அத்தடன், ஹர்திக் பாண்டியா இன்னமும் முழு பிட்னஸுடன் இல்லை என்பதால், அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

பௌலர்கள் வரிசையில், கமது ஷமி தற்போது முழு பிட்னஸுடன் இருப்பதால் ஜஸ்பரீத் பும்ராவுடன் இணைந்து பந்துவீசுவார் என்றும்,  மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் இடங்களுக்கு முகமது ஷமி, ஆகாஷ் சீப், ஹர்ஷித் ராணா ஆகியோர் இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய உத்தேச அணி

  1. ரோஹித் சர்மா (கேப்டன்)
  2. கே.எல்.ராகுல்
  3. யாஷஸ்வி ஜெய்ஷ்வால்
  4. ஷுப்மன் கில்
  5. விராட் கோலி
  6. கருண் நாயர்
  7. சாய் சுதர்ஷன்
  8. நிதிஷ் ரெட்டி
  9. ரிஷப் பந்த்
  10. துரூவ் ஜோரல்
  11. ரவீந்திர ஜடேஜா
  12. வாஷிங்டன் சுந்தர்
  13. குல்தீப் யாதவ்
  14. ஷர்தூல் தாகூர்
  15. ஜஸ்பரீத் பும்ரா (துணைக் கேப்டன்)
  16. முகமது ஷமி
  17. முகமது சிராஜ்
  18. ஆகாஷ் தீப்
  19. ஹர்ஷித் ராணா
Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!