இடது கை வீரரரை திடீரென நீக்கிய ரோஹித் சர்மா.. பிசிசிஐ அவசர அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் அணி உடனான முதலாவது டி20 போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் அணி உடனான முதலாவது டி20 போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
டாஸின் போது ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டதாக ரோஹித் சர்மா அறிவித்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் பிசிசிஐ விளக்கம் அளித்தது.
ரோஹித் சர்மா அணிக்கு திரும்பிய நிலையில் அவருடன் துவக்க வீரராக இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என கூறப்பட்டது.
போட்டிக்கு முந்தைய தினம் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரோஹித் சர்மா - ஜெய்ஸ்வால் தான் அணிக்கு துவக்கம் அளிப்பார்கள் என கூறி இருந்தார்.
இந்த நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு வலது பக்க இடுப்பில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் முதல் டி20யில் இருந்து நீக்கப்பட்டு சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கினார்.
பிசிசிஐ டாஸ் முடிந்த உடன் ஜெய்ஸ்வால் குறித்த விளக்கத்தை அளித்தது. முதல் டி20யில் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான் ஆகியோர் ஆடவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |