அழைப்பு விடுத்தும் ராமர் கோவில் விழாவுக்கு தோனி, கோலி பங்கேற்காதது ஏன்?

ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.

அழைப்பு விடுத்தும் ராமர் கோவில் விழாவுக்கு தோனி, கோலி பங்கேற்காதது ஏன்?

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி நகரம் நேற்று காலை ராமர் சிலை பிரதிஷ்டைக்காக கோலாகலமாக மாறியது. அயோத்தி முழுவதும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. 

திரும்பிய திசையெல்லாம் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் ஒலித்துக் கொண்டே இருந்தது. மக்கள் ஆடல்- பாடலுடன் தீபாவளி போல விழாவை கொண்டாடினார்கள்.

இதைதொடர்ந்து, மிக சரியாக மதியம் 12 மணி 29 நிமிடங்கள் 08 வினாடிகளுக்கு ஸ்ரீ பாலராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். 

ராமர் சிலை கண்களில் கட்டப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டது. பிரதமர் மோடி, ராமர் சிலையை வழிபட்டார்.

முன்னதாக, ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்காக கோவிலின் அறகட்டளை சார்பில் முக்கிய தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.

திடீரென விலகிய கோலி... இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்? முழு விவரம்!

இதில், முக்கிய அரசியல் தலைவர்கள் தவிர, ரஜனிகாந்த், தனுஷ், அமிதாபச்சன் உள்ளிட்டோர் விழாவிற்கு வருகை தந்தனர்.

விளையாட்டு வீரர்களான மகிந்திரசிங் தோனி, விராட் கோலி, அஷ்வின் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

விராட் கோலி ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதால் பிரதிஷ்டை விழாவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், விழாவிற்கு தோனியும் வரவில்லை.. விராட் கோலியும் வரவில்லை. இருவரும் விழாவில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து தகவல் இல்லை. 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...