டிராவிட்டின் ரெக்கார்டை உடைக்க 16 ரன்கள் தான் தேவை.... என்ன செய்ய போகிறார் கோலி?
இந்திய அணியின் விராட் கோலி ஒரு மாபெரும் சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு எட்டு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை அங்கு வென்றதில்லை.
தற்போது ஒன்பதாவது முறையாக தென்னாப்பிரிக்காவுக்கு இந்திய அணி வீரர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த டெஸ்ட் தொடரை வென்றால் இந்தியா சரித்திர சாதனையை உருவாக்கும்.
இந்த நிலையில் இந்திய அணியின் விராட் கோலி ஒரு மாபெரும் சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
அதாவது தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் தற்போது விராட் கோலி நான்காவது இடத்தில் இருக்கிறார்.
பேட்டிங் வரிசையில் அதிரடி மாற்றம்.. ரோஹித் பிளானை பார்த்து கதிகலங்கிய தென்னாப்பிரிக்கா!
அவர் தென்னாபிரிக்கா மண்ணில் 14 போட்டிகளில் விளையாடி 1236 ரன்கள் அடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் டிராவிட் 21 போட்டியில் விளையாடி 1252 ரன்கள் அடித்திருக்கிறார். கோலி மட்டும் இன்னும் 16 ரன்கள் அடித்தால் இந்த பட்டியலில் டிராவிட்டை முந்தி விடுவார்.
இரண்டாவது இடத்தில் சேவாக் 15 போட்டியில் விளையாடி 1306 ரன்களை அடித்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் தென்னாப்பிரிக்காவில் 25 போட்டிகளில் விளையாடி 1741 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இந்தத் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடினால் டிராவிட், சேவாக் ஆகியோரை முந்தி இரண்டாவது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.
இதேவேளை, இந்த தொடரின் முதல் நாளில் 90 சதவீதத்திற்கு மேல் மழை வாய்ப்பு உள்ளதுடன், இரண்டாவது நாளில் 80 சதவீதத்திற்கு மேல் மழை வாய்ப்பு இருக்கிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |