20 வருட வரலாற்று சாதனையை தகர்த்த கோலி... சச்சின், பாண்டிங் சாதனைகள் முறியடித்து மூன்று மெகா சாதனைகள்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

Nov 15, 2023 - 22:18
Nov 15, 2023 - 22:22
20 வருட வரலாற்று சாதனையை தகர்த்த கோலி... சச்சின், பாண்டிங் சாதனைகள் முறியடித்து மூன்று மெகா சாதனைகள்

பாண்டிங் ரெக்கார்டு  20 வருட சச்சின் டெண்டுல்கரின் உலகக்கோப்பை சாதனையை அரைசதம் அடித்து முறியடித்தார் விராட் கோலி. அதை விட பெரிய சாதனையாக அதிக ஒருநாள் போட்டி ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தி மூன்றாவது இடம் பிடித்து மாபெரும் வரலாற்று சாதனையை படைத்தார் விராட் கோலி.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த விராட் கோலி, இந்தப் போட்டியில் 28 ரன்களை கடந்த போது, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்கை முந்தினார்.  ரிக்கி பாண்டிங் 13704 ரன்கள் அடித்த நிலையில், கோலி அவரை கடந்து அந்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தார். 

அடுத்து அரைசதம் அடித்த கோலி ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக 50க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் வரிசையில் சச்சின் டெண்டுல்கரின் 2003 உலகக்கோப்பை சாதனையை முறியடித்தார். 

சச்சின் அப்போது ஏழு முறை 50க்கும் மேல் ரன் குவித்திருந்த நிலையில், விராட் கோலி எட்டாவது முறையாக 2023 உலகக்கோப்பை தொடரில் 50க்கும் மேற்பட்ட ரன் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

அத்துடன், 100 ஓட்டங்களை பெற்ற போது, ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சின் சாதனையை கோலி முறியடித்தார்.

கோலிக்கு இது 50 ஆவது ஒருநாள் சதமாகும்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!