காசு இல்லாமல் பேட் வாங்க தவித்த ரிங்கு சிங்.. வாங்கிக் கொடுத்த வீரர்.. யார் தெரியுமா?

ரிங்கு சிங், கிரிக்கெட் பேட் மற்றும் காலில் மாட்டும் பேடு ஆகியவை வாங்க பணம் இல்லாமல் தவித்த நிலையில், சுரேஷ் ரெய்னா அவருக்கு உதவி இருக்கிறார். 

காசு இல்லாமல் பேட் வாங்க தவித்த ரிங்கு சிங்.. வாங்கிக் கொடுத்த வீரர்.. யார் தெரியுமா?

வருங்கால இந்திய நட்சத்திரமாக உருவாகி வரும் ரிங்கு சிங், கிரிக்கெட் பேட் மற்றும் காலில் மாட்டும் பேடு ஆகியவை வாங்க பணம் இல்லாமல் தவித்த நிலையில், சுரேஷ் ரெய்னா அவரது நிலையை பார்த்து அவருக்கு உதவி இருக்கிறார். 

சுரேஷ் ரெய்னா அப்போது அவரிடம் எந்த கேள்வியுமே கேட்கவில்லை என ரிங்கு சிங்கே ஒரு பேட்டியில் கூறி  உள்ளார். சுரேஷ் ரெய்னா இடது கை ஆட்டக்காரர் அதனாலேயே, ரிங்கு சிங்கிற்கு சுரேஷ் ரெய்னா மீது ஈடுபாடு ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் சுரேஷ் ரெய்னாவை பின்பற்றத் துவங்கி இருக்கிறார் ரிங்கு சிங். 

அவரது பேட்டிங் ஸ்டைலையும் அப்படியே காப்பி அடித்து, பின்னர் ரெய்னாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது அவரிடம் ஆலோசனைகள் பெற்று தன் பேட்டிங் திறனை இன்னும் மேம்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

தான் சுரேஷ் ரெய்னாவின் தீவிர ரசிகன் என்றும், அவரைப் பின்தொடர்ந்து அவரை அப்படியே காப்பி அடிக்க முயற்சிப்பதாகவும், எனது வாழ்க்கையிலும், கேரியரிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்றும் கூறிய ரிங்கு சிங், கிரிக்கெட் விளையாட பேட், பேட்கள் மற்றும் தனக்கு தேவையான அனைத்தையும் சுரேஷ் ரெய்னா வாங்கி கொடுத்தாக கூறியுள்ளார்.

மேலும், போட்டிகளில் அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பதை ரெய்னா தனக்குக் கற்றுக் கொடுத்துள்ளதுடன், அந்த குறிப்புகள் மற்றும் பாடம் தனக்கு ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்கு ஆடும் போதும் நிறைய உதவியதாக கூறுகின்றார் ரிங்கு சிங்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...