ஐசிசி தரவரிசையில் தட்டித்தூக்கிய கோலி, ரோகித்... டாப் இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், டாப் 5ல் மட்டும் இந்திய அணியின் 3 வீரர்கள் இருக்கின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் துடுப்பாட்டவீரர்கள் தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் முதலிடத்தில் தொடர்ந்தும் உள்ளார். அதேபோல் 9வது இடத்தில் இருந்த விராட் கோலி, தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், டாப் 5ல் மட்டும் இந்திய அணியின் 3 வீரர்கள் இருக்கின்றனர்.
அதேபோல் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அசத்திய ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 16 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முகமது சிராஜ் 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் ஹேசல்வுட் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் கேசவ் மஹாராஜ் முதலிடத்தில் உள்ள நிலையில், 4வது இடத்தில் பும்ரா நீடிக்கிறார். குல்தீப் யாதவ் 6வது இடத்திலும், இந்திய அணியின் முகமது ஷமி மற்றும் ஜடேஜா இருவரும் 10வது இடத்திலும் உள்ளனர்.
உலகக்கோப்பையை வெற்றிக்கொள்ள முடியாவிட்டாலும், இந்திய அணியின் 8 வீரர்கள் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் டாப் 10 இடங்களில் உள்ளமை ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |