சூர்யகுமார் யாதவ் மோசமான காயம்... விளையாட வாய்ப்பே இல்லை.. எப்போது அணிக்கு திரும்புவார்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 - 1 என இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய டி20 அணியின் முன்னணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ்தான் இப்போது உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன். இந்த நிலையில், அவருக்கு கணுக்காலில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக அவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
முன்னதாக சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 - 1 என இந்திய அணி கைப்பற்றியது.
அடுத்து தென்னாப்பிரிக்க டி20 தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டு போட்டிகளில் ஆடி இந்திய அணி 1 - 1 என தொடரை சமன் செய்து இருந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் ஃபீல்டிங் செய்த போது கணுக்காலை மோசமான முறையில் பிசகிக் கொண்டார்.
மனம் உடைந்த இஷான் கிஷன்.. வெளியான அதிர்ச்சி தரும் உண்மை.. இரக்கம் காட்டாத ரோஹித் - டிராவிட்!
அதனால், வலியில் துடித்து பாதி போட்டியில் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த நிலையில், அவருக்கு இரண்டாம் நிலை தசைநார் கிழிசல் ஏற்பட்டு இருப்பதாகவும், அவரால் குறைந்தது மூன்று மாதத்திற்கு போட்டிகளில் பங்கேற்க முடியாது எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜனவரியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் இந்திய டி20 அணி பங்கேற்க உள்ளதுடன், அந்த தொடரில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மொத்த ஆட்டத்தையும் மாற்றிய கேட்ச்.. குழம்பிய நடுவர்கள்.. மிரட்டிய தமிழக வீரர்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |