தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய இந்தியா... ஸ்ரேயாஸ் - சாய் சுதர்சன் அதிரடி!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய இந்தியா... ஸ்ரேயாஸ் - சாய் சுதர்சன் அதிரடி!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி கைப்பற்றியது.

தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளதுடன், இந்திய அணி கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கியுள்ளது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 13 ஓவர்களிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் மட்டுமே சேர்த்து திணறியது. 

இதன்பின் இறுதியாக 27.3 ஓவர்களில் 116 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் - சாய் சுதர்சன் இருவரும் களமிறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் நிதானம் காட்டிய நிலையில், சாய் சுதர்சன் முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடங்கினார். 

அறிமுகத்திலேயே அசத்திய தமிழக வீரர்... முதல் போட்டியிலேயே சாய் சுதர்சன் சாதனை!

இதையடுத்து சரியான ஃபீல்டர் இல்லாத இடத்தில் தேடி தேடி பவுண்டரிகளை விளாசினார். இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் சாய் சுதர்சனுடன் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி அமைத்தார்.

சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 41 பந்துகளில் அரைசதம் அடிக்க, இன்னொரு பக்கம் அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சாய் சுதர்சன் - திலக் வர்மா இருவரும் சேர்ந்து வெற்றிகரமான ஆட்டத்தை முடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. 

கடைசி வரை களத்தில் இருந்த சாய் சுதர்சன் 43 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட 55 ரன்களை விளாசி அசத்தினார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...