விராட் கோலியின் விலகலுக்கு இதுதான் காரணம்... ரோஹித் சொன்ன அந்த வார்த்தை.... இனி ஓய்வு அறிவிப்பு?

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில், பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. 

Feb 11, 2024 - 23:16
விராட் கோலியின் விலகலுக்கு இதுதான் காரணம்... ரோஹித் சொன்ன அந்த வார்த்தை.... இனி ஓய்வு அறிவிப்பு?

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில், பிசிசிஐ நிர்வாகிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. 

தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் மட்டும்தான் கலந்துகொண்டனர். இந்நிலையில், விராட் கோலியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் தனத்து இடம் கிடைக்காது எனத் தெரிந்தப் பிறகுதான், கோலி விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான எனது இடத்தை உறுதி செய்தால் மட்டுமே, தான் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன், இந்தியாவை நேசித்து, கடுமையாக உழைக்கும் தன்னை அவமானப்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என பிசிசிஐ நிர்வாகிகளிடம் கோலி ஓபனாக பேசியதாக கூறப்படுகிறது.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கோலி விலகல்: காரணம் என்ன தெரியுமா? 

இதனைத் தொடர்ந்து, ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் இதுகுறித்து தெரியப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால், ரோஹித் சர்மாவோ, கோலியின் கோரிக்கையை ஏற்கவில்லையாம். 

ஐபிஎல் 17ஆவது சீசனில் கோலி ஆடுவதை பொறுத்துதான், அவரை சேர்க்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம். இதனால்தான், கடைசி மூன்று டெஸ்ட்களிலும் பங்கேற்க முடியாது என கோலி திட்டவட்டமாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கொடுக்கவில்லை என்றால், உடனே கோலி ஓய்வு அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோலி மற்றும் ரோஹித் சர்மாவுடன் பிசிசிஐ தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!