இங்கிலாந்து டெஸ்ட்டில் அதிரடி... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்.. 2 சாதனைகள் தகர்ப்பு!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து நட்சத்திர வீரர் தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து உள்ளார்.
 
                                இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்து நட்சத்திர வீரர் தோனியின் இரண்டு சாதனையை முறியடித்து உள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட், முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலியா தொடரில் எதிர்பார்த்தபடி ரன்கள் சேர்க்காத நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் மட்டும் அதிரடியாக அரை சதம் அடித்தார்.
கில், ஜெய்ஸ்வால் அதிரடி சதம்... ரிஷப் பண்ட் அரைசதம்.. முதல் நாளில் இந்திய அணி ரன் குவிப்பு!
இந்த நிலையில், லீட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 221 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தபோது ஐந்தாவது வீரராக களத்துக்கு வந்த ரிஷப் பண்ட், ஸ்டோக்ஸ் வீசிய பந்தை பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
 
தொடர்ந்து அதிரடி காட்டாமல் பொறுமையுடன் ரன்களை சேர்க்க மறுமுனையில் கில் விளையாட பண்ட் 91 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்ததுடன், முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆறு பவுண்டரி,இரண்டு சிக்ஸர்கள் அடங்களாக பண்ட், 65 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.
இந்த இன்னிங்ஸ் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்,3000 ரன்களை சேர்த்துள்ளதுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3000 ரன்கள் எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பண்ட் படைத்திருக்கிறார்.
சதமடித்த சுப்மன் கில்... கோலி, கவாஸ்கரை தொடர்ந்து அபாரம்.. பல்வேறு சாதனைகள் படைப்பு!
இதன் மூலம் தோனியின் சாதனை அவர் முறியடித்துள்ளதுடன், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையும் பண்ட் முறியடித்திருக்கிறார்.
முன்னதாக, தோனி 1731 ரன்கள் அடித்த நிலையில் ரிஷப் பண்ட் தற்போது 1734 ரன்கள் அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






