100வது டெஸ்டில் சாதித்த தமிழக வீரர்... 92 வருட வரலாற்றை மாற்றி எழுதிய அஸ்வின்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 

100வது டெஸ்டில் சாதித்த தமிழக வீரர்... 92 வருட வரலாற்றை மாற்றி எழுதிய அஸ்வின்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். 

அத்துடன், தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். 

இந்த போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலமாக 259 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்ற நிலையில், இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. 

ரோகித் சர்மாவுக்கு முதுகுபிடிப்பு காரணமாக பும்ரா கேப்டன்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட நிலையில், அஸ்வினும்  முதல் ஓவரிலேயே விக்கெட்டை 2 ரன்களில் வீழ்த்தினார்.

தொடர்ந்து அஸ்வின் சுழலில் சிக்கி கிராலி டக் அவுட்டான நிலையில், போப் 19 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அஸ்வினின் மேஜிக்கால் 2 ரன்களில் வெளியேற, விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் 5 ரன்களில் போல்டாகினார். 

இதன் மூலம் 100வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, 36வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார்.

132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனில் கும்ப்ளே 35 முறை 5 விக்கெட்டுகளையும், 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன் சிங் 25 முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

112 வருசத்தில் முதல்முறையாக இந்தியா மாஸ் வெற்றி...  புதிய புள்ளிப் பட்டியல் இதோ!

இதனை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அஸ்வின் சாதித்துள்ளார். 

மேலும், இந்த டெஸ்ட் தொடரில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...