பஞ்சாப் அணியால் தப்பித்த சிஎஸ்கே.. இல்லனா அவ்வளவுதான்... இதுதான் நடந்தது!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 23 லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 23 லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி இருக்கிறது.
சன்ரைசர்ஸ் 182 ரன்கள் குவித்த நிலையில் பஞ்சாப் அணி 58 ரன்கள் சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது.
ஒருவேளை, புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி சிஎஸ்கேவை தாண்டி நான்காவது இடத்திற்கோ இல்லை லக்னோவை தாண்டி மூன்றாவது இடத்திற்கோ சென்று இருக்க கூடும்.
ஆனால் பஞ்சாப் அணியில் உள்ள இரண்டு இளம் சிங்கங்கள் சன்ரைசஸ்க்கு கடும் நெருக்கடியை கொடுத்தார்கள். இதனால் பஞ்சாப் அணி வெற்றியின் அருகே வரை வந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
இதனால் சன்ரைசர்ஸ் அணி வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. 6 புள்ளிகளை பெற்றாலும் அவர்களால் ரன் ரேட்டில் எந்த முன்னேற்றமும் அடைய முடியவில்லை.
இதனையடுத்த, புள்ளி பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி தற்போது வெற்றி பெற்ற ஐந்தாவது இடத்திலே நீடிக்கிறது.
இதன் மூலம் சிஎஸ்கே அணி நான்காவது இடத்திலேயே உள்ளதுடன், 8 புள்ளிகள் உடன் ராஜஸ்தான் முதலிடத்திலும், 6 புள்ளிகளுடன் கொல்கத்தா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
லக்னோ, சிஎஸ்கே,சன்ரைசர்ஸ் ஆகியோர் 3, 4 மற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். லக்னோ, சிஎஸ்கே,சன்ரைசர்ஸ் ஆகியோர் முறையே 3, 4 மற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
பஞ்சாப் அணி நான்கு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், குஜராத் 4 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளது.
அத்துடன், மும்பை இரண்டு புள்ளிகள் உடன் எட்டாவது இடத்திலும், ஆர் சி பி 2 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், டெல்லி 2 புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |