“இலங்கை கிரிக்கெட் அணி ஆபத்தானது” பதறும் பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!

ஹைதராபாத்தில் இன்று நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.

Oct 10, 2023 - 16:42
“இலங்கை கிரிக்கெட் அணி ஆபத்தானது” பதறும் பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!

ஹைதராபாத்தில் இன்று நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.

இந்த நிலையில், “இலங்கை அணி ஆபத்தான அணி” என, இலங்கை அணியில் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆத்தர் கூறியுள்ளார். 

டிசெம்பர் 2019 முதல் நவம்பர் 2021 வரை இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்தவர் மிக்கி ஆத்தர் தற்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக செயற்படுகின்றார்.

“இலங்கை பயிற்சியாளராக இருந்த காரணத்தினால் எனக்கு அவர்களது பலம், பலவீனங்கள் தெரியும். எனவே நாம் அவர்களுக்காக அனைத்து திட்டங்களையும் செயற்படுத்த வேண்டும். அவர்கள் ஆபத்தான கிரிக்கெட் அணியாக காணப்படுகின்றனர்.” என்று அவர் கூறியுள்ளார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!