அடம்பிடித்த ரோகித் சர்மா... ஜெய் ஷா வரை சென்ற சம்பவம்.. பிசிசிஐ எடுத்த தீர்மானம் என்ன
இந்த பயணத்திற்கு காரணம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆகியோரின் டி20 கிரிக்கெட் நிலைப்பாடு என்ன என்பதை அறியவே என்று தெரிய வந்தது.
 
                                தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்த போது, தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் திடீரென தென்னாப்பிரிக்கா சென்றார்.
இந்த பயணத்திற்கு காரணம் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆகியோரின் டி20 கிரிக்கெட் நிலைப்பாடு என்ன என்பதை அறியவே என்று தெரிய வந்தது.
பேச்சுவார்த்தையின் முடிவில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே டி20 கிரிக்கெட்டை விளையாட தயாராக இருப்பதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, டி20 அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் டி20 அணியில் ஆடி வந்த இளம் வீரர்களின் நிலை என்னவென்பது கேள்வியாக அமைந்தது.
ரோகித் சர்மாவின் வருகையால், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
மும்பை அணியின் கேப்டன்சியை இழந்த ரோகித் சர்மா, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை வென்று மீண்டும் கேப்டன்சியை நிரூபித்துள்ளார்.
ஐபிஎல் தொடரிலும் ரோகித் சர்மா உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தால், டி20 உலகக்கோப்பை தொடருக்கும் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமனம் செய்ய வேண்டிய நிலை வரும். பிசிசிஐ-க்கு வேறு வழி கிடையாது.
மூத்த வீரரருக்கு ரிங்கு சிங் வைத்த ஆப்பு... பிசிசிஐ எடுத்த அதிரடி தீர்மானம்!
விராட் கோலியும் அணிக்கு வரும் பட்சத்தில் இந்திய அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் கூட விளையாட வாய்ப்பில்லாத நிலை உருவாகும்.
இந்த நிலையில், ஆஃப்கானிஸ்தான் டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவிக்க பிசிசிஐ திண்டாடி வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மாவை சேர்த்தால், ஒன்றரை ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அணி மற்றும் திட்டங்கள் அனைத்தையும் மாற்ற வேண்டும்.
இதனால் விவகாரத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் எதிர்காலம் குறித்தும் ஜெய் ஷாவே முடிவு எடுக்கவுள்ளார்.
ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதற்கு பின் ஜெய் ஷாவின் முடிவு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் ஜெய் ஷா என்ன செய்வார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






