இன்னமும் வலிக்கிறது.. மனமுடைந்த நிலையில் உருக்கமான பதிவிட்ட இந்திய வீரர்!
அவுஸ்திரேலிய அணியுடனான உலகக்கோப்பை தோல்விக்கு பின் பெரும் சோகத்தில் இந்திய வீரர்கள் காணப்பட்டனர். கே எல் ராகுல் ஆடுகளத்தில் கீழே முட்டி போட்டு சாய்ந்து விட்டார்.
அவுஸ்திரேலிய அணியுடனான உலகக்கோப்பை தோல்விக்கு பின் பெரும் சோகத்தில் இந்திய வீரர்கள் காணப்பட்டனர். கே எல் ராகுல் ஆடுகளத்தில் கீழே முட்டி போட்டு சாய்ந்து விட்டார்.
போட்டி முடிந்த பின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீரர்களை ஓய்வறையில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போதும் ராகுல் முகம் சோர்ந்து காணப்பட்டது. இந்த நிலையில், நான்கு நாட்கள் ஆன நிலையில் நேற்று ட்விட்டரில் தோல்வி குறித்து பதிவிட்டு இருக்கிறார் ராகுல்.
இறுதிப் போட்டியில் இந்திய அணியே வெற்றி பெறும் என அனைவரும் நம்பினர். ஆனால், எதிர்பாராவிதமாக ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ராகுல் இறுதிப் போட்டியில் 107 பந்துகளில் 66 ரன்கள் அடித்து இருந்தார்.
அவர் நிதான ஆட்டத்தால் தான் இந்திய அணி தோல்வி அடைந்தது என சிலர் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில், இந்தியா தோல்வி குறித்து ட்விட்டரில், "இன்னும் வலிக்கிறது" எனக் கூறி கே எல் ராகுல் பதிவிட்டு இருக்கிறார்.
ராகுலின் பதிவிற்கு கீழே இந்திய ரசிகர்கள் பலர், "நீங்கள் சிறப்பாக செயல்பட்டீர்கள். தோல்வியை மறந்து மீண்டு வாருங்கள்" எனக் கூறி அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |