இந்திய ODI அணியில் அதிக டக் அவுட் ஆன வீரர்கள்: ரோஹித் சர்மா, விராட் கோலி டாப் 2 - முழு பட்டியல்!
தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா? ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.
ஒருநாள் கிரிக்கெட் என்பது துவக்கத்தில் டெஸ்ட் போலவும், பின்னர் டி20 போலவும் அதிரடியாகவும் விளையாட வேண்டிய ஒரு பார்மெட். பொதுவாக நிதானமான துவக்கத்தால் டக் அவுட்கள் குறையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய ஒருநாள் அணியில் சில முன்னணி வீரர்கள் அதிக முறை டக் அவுட் ஆகியிருப்பது ஒரு சுவாரஸ்யமான புள்ளிவிவரமாகியுள்ளது. தற்போதைய இந்திய ODI அணியில் அதிக டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் என்பதை இங்கே காணலாம்.
23 வயதில் 7 டெஸ்ட் சதங்கள் - சச்சின் சாதனையை சமன் செய்து, பல உலக சாதனைகளை படைத்த இந்திய இளம் வீரர்!
ரோஹித் சர்மா (16 டக் அவுட்கள்):
இந்திய ஒருநாள் அணியின் நீண்டகால ஓபனரும், தற்போதைய கேப்டனுமான ரோஹித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் 16 முறை டக் அவுட் ஆகி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்பட்டாலும், இந்த எண்ணிக்கை அவரது பேட்டிங் திறனுக்கு ஒரு முரண்பாடான புள்ளிவிவரமாகும்.
விராட் கோலி (16 டக் அவுட்கள்):
இந்திய அணியின் ரன் மெஷின், சேஸிங் மாஸ்டர் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் விராட் கோலி டக் அவுட் ஆவார் என்பது பலருக்கும் நம்ப முடியாத விஷயம். ஆனால், ரோஹித் சர்மாவைப் போலவே இவரும் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். குறிப்பாக, தனது துவக்க காலங்களில்தான் அதிக முறை டக் அவுட் ஆனார். கிரிக்கெட் என்பது கணிக்க முடியாதது என்பதற்கு ரன் மிஷின் கோலியின் இந்த டக் அவுட்களே சிறந்த உதாரணம்.
முகமது ஷமி (6 டக் அவுட்கள்):
தற்போதைய இந்திய ஒருநாள் அணியில், ரோஹித் மற்றும் கோலியைத் தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தில் டக் அவுட் ஆகவில்லை. மூன்றாவது இடத்தில் உள்ள முகமது ஷமி, 6 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். இவர் ஒரு முழுநேர பந்துவீச்சாளர் என்பதால், பேட்டிங் என்பது இவரது முக்கிய ரோல் கிடையாது. இருப்பினும், கடைசி நேரத்தில் அணிக்கு சில ரன்கள் தேவைப்படும்போது பந்துவீச்சாளர்களும் பேட் செய்ய வேண்டிய அவசியம் இந்திய அணி போன்ற வலுவான அணிகளிலும் உள்ளது.
ரவீந்திர ஜடேஜா (6 டக் அவுட்கள்):
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஒருநாள் போட்டிகளில் 6 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். இவர் பெரும்பாலும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர். இந்த சூழலில் 6 முறை டக் அவுட் ஆனது என்பது சற்றுக் குறைவானது என்றே கருதப்படுகிறது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 7 சதங்கள், 7 வெவ்வேறு மைதானங்கள் - இந்திய கிரிக்கெட்டின் புதிய சாதனை நாயகன்
ஹர்திக் பாண்டியா (4 டக் அவுட்கள்):
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரும், ஃபினிஷருமான ஹர்திக் பாண்டியா, அணியின் கடைசி கட்ட ஓவர்களில் துவக்கம் முதலே அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். கடைசி 10 ஓவர்களில் 100 ரன்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்றால், ஹர்திக் பாண்டியா போன்றவர்கள் தொடர்ச்சியாக அதிரடி காட்டியே ஆக வேண்டும். இத்தகைய சூழலிலும் ஹர்திக் பாண்டியா இதுவரை 4 முறை மட்டுமே டக் அவுட் ஆகியிருக்கிறார் என்பது ஒரு பெரிய தவறாகப் பார்க்கப்பட வேண்டியதில்லை.
இந்திய ஒருநாள் அணி அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த்தில் முதல் போட்டியும், அதைத் தொடர்ந்து அடிலெய்டு மற்றும் சிட்னியில் மற்ற போட்டிகளும் நடைபெற உள்ளன. இத்தொடரில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தத் தொடரில் இவர்கள் சொதப்பினால், ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
