இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறிய போட்டி... செம அடி வாங்கிய இந்தியா.... காரணம் தெரியுமா?
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி துவக்கத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது.
 
                                இந்திய அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணிக்கு சாதகமாக காணப்படுகின்றது. முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் தடுமாறிய இந்திய அணி, பேட்டிங்கிலும் விக்கெட்களை இழந்துள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி துவக்கத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது.
முதல் நாள் உணவு இடைவேளைக்குள் இங்கிலாந்து அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்த நிலையில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் நிதான ஆட்டம் ஆடி சதம் அடித்தார்.
இதை அடுத்து முதல் இன்னிங்க்ஸில் 353 ரன்கள் குவித்தது இங்கிலாந்து அணி. அடுத்து முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மட்டுமே ரன் குவிக்க மற்ற பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
 
ஜெய்ஸ்வால் 73 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 161 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது.
டாஸில் இந்தியா தோற்றது தான் இந்த இக்கட்டான நிலைக்கு காரணம், முதல் மூன்று போட்டிகளிலும் எந்த அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து ஆடியதோ அந்த அணியே வெற்றி பெற்றுள்ளது.
முதல் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து, வெற்றி பெற்றது. அடுத்து நடந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வெற்றி வென்றது.
நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த நிலையில், அந்த அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
எனவே, இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிப் பெறுவது கடினமான விடயம் என்று கூறப்படுகின்றது. பொறுத்திருந்து பார்க்கலாம்.
 
                         Editorial Staff
                                    Editorial Staff                                 WHATSAPP CHANNEL
            WHATSAPP CHANNEL
         GOOGLE NEWS
            GOOGLE NEWS
         
        
             
        
             
        
             
        
             
        
             
        
             
        
 
        
 
        
 
        
 
        

 
        
                                        
                                     
        
 
        
 
        
 
        
 
        






