இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்... நான்காவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனை மாற்ற கம்பீர் முடிவு?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நாளைய ஆட்டம் தொடரில் முன்னிலை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்.

இந்திய அணியில் இருந்து விலகிய முக்கிய வீரர்... நான்காவது டி20 போட்டியில் பிளேயிங் லெவனை மாற்ற கம்பீர் முடிவு?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நாளைய ஆட்டம் தொடரில் முன்னிலை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்.

இந்த நிலையில், இரு அணிகளிலிருந்து  இந்த போட்டிக்கு முன்பாக முக்கிய வீரர்கள் சிலர் வெளியேறி இருப்பது ரசிகர்கள் இடையே  அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட், ஆசஸ் தொடரில் பங்கேற்பதற்காக விலகி விட்டார்.

இந்திய அணியில் தென்னாப்பிரிக்க தொடருக்கு தயாராக குல்தீப் யாதவ் அணியை விட்டு சென்றிருக்கிறார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றம் கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி மூன்று மாற்றங்களை செய்து இருந்தது.

சஞ்சு சாம்சனுக்கு பதில், ஜித்தேஷ் சர்மா களமிறங்கியதுடன்,  ஹர்ஷித் ராணாவுக்கு பதில் விளையாடிய ஆர்ஸ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

குல்தீப் பதில் வாஷிங்டன் சுந்தரும் பேட்டிங்கில் 49 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்த நிலையில் நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி இதே பிளேயிங் லெவனை பயன்படுத்துமா அல்லது மாற்றத்தை செய்யுமா என்ற கேள்வி காணப்படுகின்றது.

இந்தத் தொடரில் ரிங்கு சிங் மட்டும் இன்னும் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை. இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன், கில்லுக்கு ஓய்வு அளித்துவிட்டு சஞ்சு சாம்சனை தொடக்க வீரராக கொண்டு வரவும் ரிங்கு சிங்கை நடு வரிசையில் பயன்படுத்தவும் கம்பீர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

எனினும், கில்லுக்கு ஓய்வு வழங்கும் முடிவை எடுக்க மாட்டார் என்றும் தொடர்ந்து கில், அபிஷேக் ஷர்மா ஜோடியே விளையாடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, தென்னாப்பிரிக்க தொடருக்கு தயாராக குல்தீப் யாதவ் அணியை விட்டு சென்றிருக்கிறார். இதனால் நான்காவது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கம்பீர் மாற்ற வாய்ப்பு உள்ளதாகவே ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.