முழு திறமைய வெளிப்படுத்தினா.. எந்த அணியும் நிக்க முடியாது.. ஓவர் பில்டப் கொடுக்கும் பிராட்!

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முழு திறமையையும் வெளிப்படுத்தினால் அவர்களை வீழ்த்துவது கடினமான ஒன்று என்று இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

முழு திறமைய வெளிப்படுத்தினா.. எந்த அணியும் நிக்க முடியாது.. ஓவர் பில்டப் கொடுக்கும் பிராட்!

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முழு திறமையையும் வெளிப்படுத்தினால் அவர்களை வீழ்த்துவது கடினமான ஒன்று என்று இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ளது. 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலகக்கோப்பையை இந்தியா வென்றது. 

அதேபோல் 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரை ஆஸ்திரேலியாவும், 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பையை இங்கிலாந்து அணியும் வென்றது.

அதனால் சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பையை இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் பேசுகையில், இந்த உலகக்கோப்பை இங்கிலாந்து அணி வென்றால் அது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். ஆனால் இந்திய அணியின் தொடராக தான் பார்க்கிறேன்.

இந்திய அணியை தடுத்து நிறுத்துவது அவ்வளவு எளிதல்ல. பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியால் மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியும் என்று கருதுகிறேன். 

ஆனால் இந்தியாவை வீழ்த்த முடியுமா என்பது மட்டுமே சந்தேகம். ஏனென்றால் சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை தொடர்களை கடந்த சில ஆண்டுகளில் அந்த அணியை வென்றுள்ளது.

என்னை பொறுத்தவரை இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடும் என்று நினைக்கிறேன். அதேபோல் அரையிறுதி தொடருக்கு பாகிஸ்தான் அணி நிச்சயம் முன்னேறும் என்று நினைக்கிறேன். 

அவர்களின் வேகப்பந்துவீச்சும், பாபர் அசாமின் அபாரமான பேட்டிங், ஹாரிஸ் ராஃப் மற்றும் ஷாகின் அப்ரிடி ஆகியோரால் பாகிஸ்தான் அணியை அட்டாக்கிங் அணியாக பார்க்கிறேன்.

அதேபோல் ஐசிசி தொடர்கள் என்று வந்துவிட்டால் நியூசிலாந்து அணியை எளிய அணியாக பார்க்க முடியாது. இதனால் ஆஸ்திரேலிய அணியுடன் ஒப்பிட்டாலும், நியூசிலாந்து அணியையே அபாயகரமான அணியாக பார்க்கிறேன். 

இதனால் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...