502 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை... தரமான சம்பவம் செய்த அஸ்வின், ஜடேஜா!

ஹைதராபாத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

502 விக்கெட் வீழ்த்தி வரலாற்று சாதனை... தரமான சம்பவம் செய்த அஸ்வின், ஜடேஜா!

ஹைதராபாத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முதல் இரண்டு நாட்களின்போது, பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டதால்தான், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஓபனர்கள் ஜாக் கிரௌலி, பென் டக்கட் இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள். 

வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, சிராஜால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதனால், இங்கிலாந்து அணி முதல் 11 ஓவர்களில் 53/0 ரன்களை சேர்த்து நல்ல நிலையில் இருந்தது.

அதிரடி காட்டிய இங்கிலாந்து அணி.. அஸ்வினால் நொடியில் மாறிய ஆட்டம்.. எதிர்பாராத ட்விஸ்ட்!

இதனைத் தொடர்ந்து, அடுத்து பந்துவீச வந்த அஸ்வின் தனது இரண்டாவது ஓவரிலேயே டக்கட் 35 (39) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அடுத்து, இங்கிலாந்துக்கு பின்னடைவுதான் ஏற்பட ஆரம்பித்தது. 

பேஸ்பால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. ஒல்லி போப்1 (11) விக்கெட்டை ஜடேஜா எடுத்துக் கொடுத்தார். தொடர்ந்து, அடுத்த ஓவரிலேயே அஸ்வின் பந்தில் கிரௌலி 20 (39) அடித்த கேட்சை சிராஜ் தரமான முறையில் பிடித்ததால், இங்கிலாந்து அணி, திடீரென்று 60/3 என படுமோசமாக தடுமாற ஆரம்பித்தது.

இந்திய அணிக்காக அனில் கும்ளே மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் இணைந்து 501 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்கள். 

இந்நிலையில், இப்போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், அஸ்வின் ஜடேஜா ஆகியோர் இணைந்து 502 விக்கெட்களை கைப்பற்றி, நீண்ட நாள் சாதனையை தகர்த்து உள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...