செமி பைனலில் இந்திய அணிக்கு காத்திருந்த ஆப்பு.. பாண்டியாவை கழட்டி விட காரணம் இதுதான்

இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

செமி பைனலில் இந்திய அணிக்கு காத்திருந்த ஆப்பு.. பாண்டியாவை கழட்டி விட காரணம் இதுதான்

இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை அரை இறுதிப் சுற்றுக்கு முன்னதாக அணியில் இணைவார் என பிசிசிஐ அதிகாரிகள் கூறி வந்த நிலையில், அவர் திடீரென நீக்கப்பட்டு இருக்கிறார்.

அரை இறுதியில் ஹர்திக் பாண்டியா அணியில் இணைந்து ஆடும் அளவுக்கு உடற்தகுதி பெறாவிட்டால் இந்திய அணிக்கு ஒரு சிக்கல் காத்திருந்தது. அதனால் தான் பாண்டியா அரை இறுதிக்கு முன்னரே அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது.

ஐசிசி விதிப்படி உலகக்கோப்பை தொடரில் 15 வீரர்கள் தான் பங்கேற்க வேண்டும். அதில் ஒரு வீரரை மாற்ற வேண்டும் என்றால் அவருக்கு காயம் உள்ளிட்ட நியாயமான காரணம் இருக்க வேண்டும். 

அதை ஐசிசி டெக்னிகல் கமிட்டி முன் அந்த அணி நிரூபித்து, அவருக்கு இணையான மாற்று வீரரை அணியில் சேர்த்துக் கொள்ள அனுமதி பெற வேண்டும்.

இந்த விதி இருப்பதால் சில அணிகள் தங்களின் நட்சத்திர வீரர்கள் காயம் ஏற்பட்ட போதும் அவரை மாற்றாமல் அணியில் தொடரச் செய்தன. ஏனெனில், அவருக்கு பதில் மாற்று வீரரை அணியில் சேர்த்து விட்டால் பின்னர் அந்த நட்சத்திர வீரர் காயம் குணமடைந்து மீண்டு வந்தாலும் அணியில் சேர்க்க முடியாது.

அதே காரணத்தால் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த போதும் அவரை நீக்கி, மாற்று வீரரை அணியில் சேர்க்காமல் இருந்தது இந்திய அணி. ஆனால், அவருக்கு கணுக்காலில் காயம் இருந்தது. அத்துடன் அவரால் வேகப் பந்து வீச முடியாது என உறுதி செய்யப்பட்ட நிலையில், அரை இறுதிப் போட்டிகளில் அவர் ஆடுவது கடினம்.

அதே சமயம், தற்போது பாண்டியாவிற்கு பதில் முகமது ஷமி அணியில் ஆடி வருகிறார். முகமது ஷமி, பும்ரா, முகமது சிராஜ் என மூன்று முக்கிய வேகப் பந்துவீச்சாளர்களும் அணியில் இணைந்து ஆடி வருகின்றனர். 

இந்த நிலையில், அவர்களில் ஒரு பந்துவீச்சாளருக்கு காயம் ஏற்பட்டால் அரை இறுதியின் போது மாற்று வேகப் பந்துவீச்சாளர் இல்லாத நிலை ஏற்படும். ஷர்துல் தாக்குர் அணியில் இருந்தாலும் அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுக்கிறார் என்ற புகார் உள்ளது.

எனவே தான் அரை இறுதிக்கு முன்னதாக பந்து வீச வாய்ப்பு இல்லாத ஹர்திக் பாண்டியாவை நீக்கி விட்டு, வேகப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஒருவேளை ஷமி, பும்ரா, சிராஜ் ஆகிய மூவரில் ஒருவருக்கு அடுத்த லீக் போட்டியில் ஓய்வு அளிக்க வேண்டும் என்றாலோ, காயம் ஏற்பட்டு அதற்கு மாற்றாக ஒரு வீரரை சேர்க்க வேண்டும் என்றாலோ பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்படுவார். இதன் காரணமாகவே பாண்டியா நீக்கப்பட்டு இருக்கிறார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...