கோலி வந்தா நீ காலி.. ஒரே வழிதான் இருக்கு... இளம் வீரருக்கு ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகிய முக்கிய மிடில் வரிசை வீரர்கள் விலகிவிட்டனர். 

கோலி வந்தா நீ காலி.. ஒரே வழிதான் இருக்கு... இளம் வீரருக்கு ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகிய முக்கிய மிடில் வரிசை வீரர்கள் விலகிவிட்டனர். 

இதனால், மிடில் வரிசையை தரமான வீரரை வைத்து நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிசிசிஐ, முதல்தர போட்டிகளில் டான் பிராட் மேனுக்கு அடுத்தபடியாக, சிறந்த சராசரி (69 சராசரி) வைத்திருக்கும் சர்பரஸ் கானை அணியில் சேர்த்துள்ளனர்.

சர்பரஸ் கான், கடந்த 7 வருடங்களாகவே ரஞ்சிக் கோப்பை தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும், அவர் அதிக எடை கொண்ட வீரராக இருக்கிறார், தந்தையே அவருக்கு பயிற்சியாளராக இருக்கிறார் எனக் கூறி, பிசிசிஐ இவரை ஒதுக்கியது. 

ஆனால், தற்போது தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காரணம், புஜாரா மற்றும் ரஹானேவை இனி சேர்க்க கூடாது என முடிவு எடுத்துவிட்டதால், கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு மாற்றாக ஒரு தரமான வீரரை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ இருந்தது. இறுதியில், சர்பரஸ் கானை தேர்வுசெய்துள்ளளனர்.

சர்பரஸ் கானுக்கு எவ்வித சர்வதேச அனுபவமும் கிடையாது. இருப்பினும், ரஞ்சிக் கோப்பை தொடரில் தொடர்ந்து ரன்களை குவித்து வருகிறார். இதனால்தான், இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

அதுமட்டுமல்ல, இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், கோலி இடத்தில் சர்பரஸ் கான் களமிறங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படி களமிறங்கினால், அவர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

சர்பரஸ் கான் குறித்துப் பேசிய ஹர்பஜன் சிங், ''இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின்போது, கோலி அணிக்கு திரும்பிவிடுவார். கோலி வந்துவிட்டால், சர்பரஸ் கானுக்கு லெவன் அணியில் இடம் கிடைக்காது. 

இதனால், இரண்டாவது போட்டியில் சர்பரஸ் கான் நிச்சயம் தனது திறமையை நிரூபித்தாக வேண்டும். ஆகையால், இந்த விஷயம் அவருக்கு அழுத்தங்களை கொடுக்கலாம். இந்த அழுத்தங்களை சமாளிப்பதில்தான், சர்பரஸ் கானின் திறமை இருக்கிறது. அவரது பேட்டிங் பிரச்சினை இல்லை. அழுத்தங்களை சமாளிப்பதில்தான், அவரது எதிர்காலம் இருக்கிறது'' எனக் கூறினார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...