இதனைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது... ரோகித் சர்மாவை கிழித்து தொங்கவிட்ட ஜாம்பவான்!
37 வயது ஆகும் ரோகித் சர்மா தன்னுடைய சிறந்த காலத்தை கடந்து வந்து விட்டார். தற்போது அவரால் சில அதிரடி கேமியோ இன்னிங்ஸ்களை ஆட முடியும்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டனான ஜெஃப்ரி பாய் காட் ரோகித் சர்மாவை கிழித்து தொங்க விட்டு உள்ளார்.
37 வயது ஆகும் ரோகித் சர்மா தன்னுடைய சிறந்த காலத்தை கடந்து வந்து விட்டார். தற்போது அவரால் சில அதிரடி கேமியோ இன்னிங்ஸ்களை ஆட முடியும்.
ஆனால் கடந்த நான்கு வருடங்களில் சொந்த மண்ணில் ரோகித் சர்மா வெறும் 2 சதம் தான் அடித்திருக்கிறார். இந்திய அணி ரோகித் தலைமையில் ஆடுகளத்தில் மிகவும் பலவீனமான அணியாக திகழ்கிறது.
ஜெய்ஷாவின் அதிரடி தீர்மானம்.. பிசிசிஐயில் இனி இல்லை... நடக்க போகும் அதிரடி மாற்றம்!
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை சுலபமாக வீழ்த்த தற்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இதைவிட ஒரு வாய்ப்பு இங்கிலாந்துக்கு கிடைக்காது.
ஜடேஜா இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாக இந்தியாவுக்கு அமையும். ஏனென்றால் அவர் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர், இதேபோன்று கோலி இல்லாதது இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு.
அவர் இந்திய மண்ணில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார். சராசரியாக இந்திய ஆடுகளத்தில் அவர் 60 ரன்கள் அடித்திருக்கிறார்.
மேலும் விராட் கோலி களத்தில் நிற்கும் போது வீரர்கள் சோர்வாக இணைந்தால் அவர்களுக்கு புத்துணர்ச்சியை வழங்குவார். கோலி இல்லாததை இங்கிலாந்து வீரர்கள் நிச்சயம் பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெற வேண்டும்” என்று கூறி உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |