இந்தியாவின் புதிய டி20 கேப்டன் ஹர்திக் இல்லை.... ரோஹித், கோலி கட்டாயம்... கம்பீர் பரிந்துரை!

அடுத்த டி20 உலக கோப்பைக்கு யார் புதிய கேப்டனாக வரவேண்டும் என்பது குறித்து கௌதம் கம்பீர் பரிந்துரை கொடுத்திருக்கிறார். 

இந்தியாவின் புதிய டி20 கேப்டன் ஹர்திக் இல்லை.... ரோஹித், கோலி கட்டாயம்... கம்பீர் பரிந்துரை!

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. வரும் ஜூன் மாதம் இந்த தொடர் நடைபெற உள்ளதால் இதற்காக இந்திய அணி தற்போதிலிருந்தே தயாராகும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் டி20 போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் பங்கேற்பதில்லை என்ற நிலையில், புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கு சூரியகுமார் யாதவை கேப்டனாக தேர்வு செய்துள்ள நிலையில், ஹர்திக் பாண்டியா தற்போது காயம் அடைந்துள்ளதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த டி20 உலக கோப்பைக்கு யார் புதிய கேப்டனாக வரவேண்டும் என்பது குறித்து கௌதம் கம்பீர் பரிந்துரைத்து உள்ளார். 

கோலி, ரோஹித் ஆகிய இருவருமே டி20 உலக கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும். அதிலும் முக்கியமாக ரோகித் சர்மாவே டி20 உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். 

ரோகித் சர்மா தான் டி20 உலக கோப்பையில் கேப்டனாக செயல்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இந்த உலக கோப்பையில் பேட்டிங்கில் எப்படி விளையாட வேண்டும் என்று ரோகித் சர்மா அனைவருக்குமே காட்டி இருக்கிறார்.

ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டால் விராட் கோலியும் நிச்சயம் தானாகவே தேர்வாகி விடுவார். ரோகித் சர்மா இந்த டி20 உலக கோப்பையில் விளையாட வேண்டும் என நினைத்தால், அவர் தான் கேப்டனாக தேர்வு செய்யப்பட வேண்டும்” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...