கைநழுவிய உலக கோப்பை... சாம்பியன்ஸ் டிராபிக்காவது இங்கிலாந்து தகுதி பெறுமா?

2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் டாப் 8 இடத்தை பிடிக்கும் அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும். 

கைநழுவிய உலக கோப்பை... சாம்பியன்ஸ் டிராபிக்காவது இங்கிலாந்து தகுதி பெறுமா?

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனாக களம் இறங்கிய இங்கிலாந்து அணி தற்போது தொடரை விட்டு வெளியேறிவிட்டது.

அது மட்டுமல்லாமல் விளையாடிய ஏழு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இங்கிலாந்து அணி புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது. 

இன்னும் அவர்கள் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இந்த நிலையில் உலகக் கோப்பை தொடர்தான் போய்விட்டது என்றாலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்து பங்கு பெற ஒரு மெல்லிய வாய்ப்பு இருக்கிறது. 

2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் டாப் 8 இடத்தை பிடிக்கும் அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும். 

அதன்படி உலக கோப்பை புள்ளி பட்டியலில் போட்டியை நடத்தும் பாகிஸ்தானை தவிர எஞ்சிய எட்டு இடங்களை பிடிக்கும் அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.

இதனால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தகுதிப் பெற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம். 

இங்கிலாந்து அணி தற்போது எஞ்சி உள்ள நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்று ஆக வேண்டும். 

அப்படி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் தயவு இருந்தால் தான் இங்கிலாந்து அணியால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு செல்ல முடியும்.

அந்த வகையில் பங்களாதேஷ் அணியை இலங்கை அல்லது ஆஸ்திரேலியா கண்டிப்பாக வீழ்த்த வேண்டும். அது மட்டுமல்லாமல் நெதர்லாந்து அணியை இந்தியா வீழ்த்த வேண்டும். 

இது அனைத்தும் நடந்தால் மட்டுமே இங்கிலாந்து அணியால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெற முடியும். இதனால் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவின் தயவு தற்போது இங்கிலாந்து அணிக்கு தேவைப்படுகிறது. 

ஒரு வேலை இங்கிலாந்து அணி, பாகிஸ்தானுக்கு எதிராகவோ இல்லை நெதர்லாந்துக்கு எதிராகவோ தோல்வியை தழுவினால், அவர்களால் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு கூட செல்ல முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...