இங்கிலாந்து விரித்த வலை... ரோகித் கொடுத்த தைரியம்... தப்பித்தது எப்படி? சுப்மன் கில் பேச்சு
இங்கிலாந்து மற்றம் இந்திய அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றம் இந்திய அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி இன்னிங்ஸில் 192 ரன்களை நோக்கி இந்திய அணி விளையாடிய போது, சுப்மன் கில் 124 பந்துகளை எதிர் கொண்டு 52 ரன்கள் சேர்க்க, துருவ் ஜூரல் 39 ரன்கள் எடுத்தார்.
இதன் காரணமாக நான்காவது டெஸ்டில் வென்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றிய நிலையில், செய்தியாளரிடம் சுப்மன் கில் பேசினார்.
அப்போது, இந்த போட்டியில் தாம் கடும் அழுத்தத்தை சந்தித்ததாகவும், தங்களுக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் கூறினார்.
எனினும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல அடித்தளத்தை போட்டதால், தன் மீது இருந்த அழுத்தம் குறைந்தாக அவர் குறிப்பிட்டார்.
“இங்கிலாந்து வீரர்கள் பவுண்டரியை விடக்கூடாது என்பதற்காக எல்லைக்கோட்டில் நின்று கொண்டார்கள். எனவே இதனை ஒரு வாய்ப்பாக கருதி நாங்கள் சிங்கிள் ஓட்டங்களை அதிகம் எடுக்க தொடங்கினோம்.
நான் இந்த தொடரில் அதிகம் LBW ஆன நிலையில், நான்காவது போட்டியில் LBW ஆகிவிடக் கூடாது என்று நான் எண்ணின பேட்டிங் செய்யும்போது இறங்கி வந்து ரன்கள் சேர்த்தேன். இதன் மூலம் எனக்கு இங்கிலாந்து விரித்த வலையில் இருந்து தப்பித்தேன்.
இந்த தொடரில் அனுபவ வீரர்கள் பலர் இல்லாத நிலையில், முதல் டெஸ்ட்டுக்கு பிறகு கே எல் ராகுல் விலகி சென்றதும் எங்களுக்கு பின்னடைவாக இருந்தது.
ஆனால் ரோகித் சர்மா எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார். எங்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். எங்களை சுதந்திரமாக விளையாட அவர் வற்புறுத்தினார்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |