பிளேயிங் லெவனில் இல்லாமலேயே... மாபெரும் சாதனை நிகழ்த்திய இந்திய அணி வீரர்... என்ன தெரியுமா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி டிராவில் முடித்தது. இதன் காரணமாக தொடரை இழக்கும் நிலையில் இருந்து இந்திய அணி தப்பியது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி டிராவில் முடித்தது. இதன் காரணமாக தொடரை இழக்கும் நிலையில் இருந்து இந்திய அணி தப்பியது.
நான்காவது போட்டியின் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யும்போது கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் காலில் காயமடைந்தார்.
பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் போது கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் கீப்பிங் பணியை மேற்கொண்டார்.
ஏற்கெனவே இந்த தொடரின் போது அடிக்கடி காயத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பராக செயல்பட்ட நிலையில், நான்காவது போட்டியின் போது பண்ட் வெளியேறியதால் விக்கெட் கீப்பிங் செய்த துருவ் ஜுரேல் பிளேயிங் லெவனில் இடம் பெறாமலேயே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மாபெரும் சாதனையை செய்து உள்ளார்.
அந்த வகையில், சர்வதேச டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனில் இடம் பெறாமல் மாற்று வீரராக களத்திற்கு வந்து ஒரே இன்னிங்ஸில் அதிக ஸ்டம்பிங் செய்த வீரர் என்ற சாதனையை துருவ் ஜுரேல் படைத்துள்ளார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர்களான ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரை ஜுரேல் ஸ்டம்பிங் செய்ததன் மூலம் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் ஒரு இன்னிங்ஸில் அதிக ஸ்டம்பிங் செய்த மாற்று விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இவருக்கு முன்னதாக பல்வேறு விக்கெட் கீப்பர்கள் ஒரு இன்னிங்ஸில் ஒரு ஸ்டம்பிங் செய்திருந்தாலும் இவர் இரண்டு ஸ்டம்பிங்கை செய்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான துருவ் ஜுரேல் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்துடன் 202 ரன்கள் குவித்து உள்ளதுடன், அடுத்த போட்டியில் இருந்து பண்ட் வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக ஜுரேல் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடுவார்.